ராபர்ட் மாஸ்டரை பிக்பாஸ் வீட்டிற்குள் பரிந்துரை செய்து அனுப்பி வைத்த தனக்கு மிக அவமானமாகவும், அசிங்கமாக இருப்பதாகவும், சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டது போல் இருப்பதாகவும் நடிகை வனிதா பேசியிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. நடிகை வனிதாவிற்கு இரண்டு திருமணம் ஆகி இரண்டு திருமணங்களும் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் மூன்றாவதாக நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டரை காதலித்து வந்தார். பின்னர் அந்த காதலும் முறிந்து போனது. இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டர் தற்போது பிக் பாஸ் சீசன் சிக்ஸ்ஸில் ஒரு போட்டியாளராக இருந்து வருகிறார். அங்கு அவர் ரட்சிதாவுடன் செய்யும் காதல் லீலைகள் முகம் சுளிக்கும் வகையில் இருக்கிறது. ராபர்ட் மாஸ்டர் எல்லை மீறுகிறாரோ என்ற எண்ணமும் ஏற்படுகிறது.

இந்த நிலையில் பேட்டி ஒன்றை அளித்துள்ள வனிதா, ராபர்ட் மாஸ்டர் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார் .அதாவது வனிதா பிக் பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக பங்கேற்று இருந்தபோது ராபர்ட் மாஸ்டர் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் தற்போது அந்த திருமணம் என்ன ஆனது என்று தெரியவில்லை. தற்போது பிக்பாஸில் 23 வயது பெண்ணை காதலித்து வருவதாக அவர் கூறிக்கொண்டுள்ளார். மேலும் ரம்சிதா உடன் அவர் காதல் லீலைகளில் ஈடுபட்டிருப்பது பார்க்க முடியவில்லை. ஒருமுறை திடீரென தன்னை அணுகி தனக்கு பிக்பாஸ் செல்லும் வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும், பரிந்துரை செய்யும்படியும் ராபர்ட் மாஸ்டர் தன்னிடம் கேட்டதாக வனிதா கூறினார். அப்போது தன்னுடைய பரிந்துரையின் பெயரில் தான் அவர் பிக்பாஸ்க்கு சென்றார் என்று வனிதா கூறியுள்ளார்.

மேலும் பிக்பாஸிற்கு செல்லும் முன்னர் சீசன் 5 வில் பங்கேற்ற நிருப் எப்படி தனது முன்னாள் காதலி யாஷிகாவால்தான் தான இந்த இடத்திற்கு வந்ததாக கூறினாரோ, அதேபோல் வனிதாவால் தான் இந்த இடத்திற்கு வந்ததாக கூறுவேன் என்று சொல்லிவிட்டு ராபர்ட் மாஸ்டர் சென்றிருக்கிறார். ஆனால் அவ்வாறு கூறவில்லை, உள்ளே சென்ற பின்பு அவருடைய முகமே மாறிவிட்டது. தன்னுடைய நண்பர்களால் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் நீங்கள் நினைக்கும் நபரால் அல்ல என்று வனிதாவை தாக்கும் விதமாக ராபர்ட் மாஸ்டர் பேசியிருந்தார். அதை குறிப்பிட்டு பேசிய வனிதா சொந்த காசில் நானே சூனியம் வைத்துக் கொண்டேன். இதை பார்க்கும் பொழுது அசிங்கமாக இருக்கிறது என்று கோபத்துடன் பேசினார்.

மேலும் பிக்பாஸ் வீட்டில் யாராவது லவ் பண்ணுவார்கள், லவ் எல்லாம் வேண்டாம் என்று அறிவுரை சொல்லுமாறு ராபர்ட் மாஸ்டரிடம் சொன்னேன். ஆனால் ராபர்ட்டே லவ் பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை. வாய்ப்பு கொடுத்த என்னையே பகைத்துக் கொண்டு என்னை ஏமாற்றிவிட்டு உள்ளே சென்று இருக்கிறான் என்று ராபர்ட் மாஸ்டர் மீது கடுமையாக விமர்சனங்களை முன் வைத்தார் வனிதா.