மண்டியிட்டு இயேசுவிடம் பாவ மன்னிப்பு கேட்கும் நயன்தாரா.! Mass லுக்கில் வெளியான போஸ்டர். !

நயன்தாரா தற்போது தனது புது படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியிருக்கிறது. கனெக்ட் என்ற அந்த திரைப்படம் விரைவில் திரையில் வெளியாக இருக்கிறது. அந்த படத்தின் டீசர் வருகிற 18-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். அதற்கு முன்பே அவர் மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதற்கு முன்னர் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளனாகவும் வேலை பார்த்து வந்தார். இவர் திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளில் சுமார் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்து இருக்கிறார்.

மண்டியிட்டு இயேசுவிடம் பாவ மன்னிப்பு கேட்கும் நயன்தாரா.! Mass லுக்கில் வெளியான போஸ்டர். ! 1

விளம்பரம்

தற்போது இவர் தனது முதல் ஹிந்தி படமான ஜவான் படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் நயன்தாரா நடித்த வரும் கனெக்ட் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் சத்யராஜ், நடிகர் வினய், அனுபம் கேர் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அஸ்வின் சரவணன் இந்த படத்தை. திரில்லர் ஜானரில் இயக்கியிருக்கிறார். ஏற்கனவே மாயா படத்தில் திரில்லர் ஜானரில் நயன்தாரா நடித்திருக்கிறார். மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் உடன் மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

தொடர்புடையவை  சூர்யா இந்தியன் இல்லையா? வெளுத்து வாங்கும் பிஜேபி பிரமுகர் காயத்ரி ரகுராம்

மண்டியிட்டு இயேசுவிடம் பாவ மன்னிப்பு கேட்கும் நயன்தாரா.! Mass லுக்கில் வெளியான போஸ்டர். ! 3
இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. படத்தின் டீசர் நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 18ஆம் தேதி வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் அறிவித்து இருக்கிறார். மேலும் நயன்தாரா மண்டியிட்டு இயேசுவிடம் மன்னிப்பு கேட்பது போல் இருக்கும் புதிய போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment