மகாலட்சுமி உடன் ஹோட்டலுக்கு சென்று இருக்கும் புகைப்படத்தை ரவீந்தர் சமீபத்தில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் மகாலட்சுமி கர்ப்பமாக இருக்கிறாரா? என்று கேள்விகள் எழுப்பி வருகின்றனர். ஆனால் இது குறித்து ரவீந்தர் எந்தவிதமான பதிலையும் சொல்லாமல் இருந்து வருகிறார். லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கும் ரவீந்தர், சமீபத்தில் சின்னத்திரை நடிகையாக இருக்கும் மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். 2007 ஆம் ஆண்டு முதல் சின்னத்திரையில் நடித்து வருபவர் மகாலட்சுமி. இவர் சில வருடங்களுக்கு முன்பு தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அப்போது லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்தபோது இவருக்கும் அதன் உரிமையாளரான ரவீந்தருக்கும் காதல் மலர்ந்தது.

இருவரும் சமீபத்தில் திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு திரைத்துறையினர் யாரையும் அழைக்காமல் குடும்பத்தினரை மட்டும் வைத்து திருமணம் செய்து கொண்டனர். மகாலட்சுமிக்கு ஏற்கனவே ஆறு வயதில் ஒரு மகன் இருக்கிறார். அதேபோல் ரவீந்தருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகி இருந்தது. இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். இந்த நிலையில் மகாலட்சுமியை கரம்பிடித்த பின்னர் இருவரும் மிக சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர். அடிக்கடி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் தனது காதல் மனைவிக்காக மோரிஸ் கேரேஜ் ரக காரை சமீபத்தில் பரிசளித்து இருந்தார் ரவீந்தர்.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ரவீந்தரும் மகாலட்சுமியும் ஒரு ஹோட்டலுக்கு சென்று இருந்தனர். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரவீந்தர் தனது instagram பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படத்தில் மகாலட்சுமியின் வயிறு கொஞ்சம் பெரிதாக இருப்பது போல் இருந்தது. இதை பார்த்த பலரும் மகாலட்சுமி கர்ப்பமாக இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பி வந்தனர். ஆனால் இரண்டு நாட்களுக்கு பின்பும் ரவீந்தர் இது குறித்து எந்த விதமான பதிலும் தெரிவிக்கவில்லை. முன்பெல்லாம் ஏதாவது கமெண்ட் செய்தால் அதற்கு பதில் அளிக்கும் ரவீந்தர் இந்த கேள்விக்கு மௌனம் காப்பதால் ஒருவேளை ரசிகர்களின் சந்தேகம் உண்மையாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. விரைவில் இது குறித்து ரவீந்தர் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.