சீனாவில் சுற்றுச்சூழல் மாசு குறைந்து வருகிறது!

சீனாவில் சுற்றுச்சூழல் மாசு குறைந்து வருகிறது! 1

பல தசாப்தங்களாக சீனாவில் மாசு அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இணையாக இருந்து வந்த நிலையில் சமீபகாலமாக அந்த இணைப்பு பலவீனமடைந்து வருகிறது. ஆனால் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வு அதிகரித்து வருகிறது. ஐந்து நாடுகளின் சர்வதேச ஆராய்ச்சியாளர்களின் குழுவால் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் முதலீடுகள் தான் சீனாவின் மாசு குறைந்து வருவதற்கான காரணமென்று இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றது. மேலும் 1970 களின் பிற்பகுதியிலிருந்து சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய ஆரம்பமாகிய சமையத்தில் சுற்றுச்சூழல் மாசும் அதிகரித்தது. ஆனால் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின் படி 1995 ஆம் ஆண்டிலிருந்து மாசு மற்றும் பொருளாதார வளர்ச்சியின் இணைப்பு குறைந்து கொண்டே வருவதாக தகவல்கள் கூறுகின்றது.

விளம்பரம்

சீனாவில் 1977 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் ஆய்வாளர்கள் சுற்றுச்சூழல் நிலைமைகள், பொருளாதார வளர்ச்சி, நகர்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையிலான இடைவெளிகள், பிராந்திய வேறுபாடுகள், சமூக சமத்துவமின்மை, கல்வியில் சமத்துவம், சுகாதாரம். கடலில் நில அடிப்படையிலான தாக்கங்கள் போன்ற ஆய்வுகளை மேற்கொண்டது.

தொடர்புடையவை  2,200 ஆண்டுகளுக்குப் பிறகு எகிப்து மன்னரின் கோவில் கண்டுபிடிப்பு!!

கடந்த 40 ஆண்டுகளில் 17 நிலையான வளர்ச்சி இலக்குகளில் (எஸ்.டி.ஜிக்களில்) 12 இல் சீனா முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதையும் ஆய்வு காட்டுகிறது. அதே நேரத்தில் மற்ற ஐந்தில் பெரிய பிரச்சினைகள் உள்ளதாக கூறப்படுகிறது.

விளம்பரம்

சீனாவின் பொருளாதாரம் நன்றாக வளர்ச்சி அடைந்திருந்தாலும் அதிகரித்து வரும் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வு மற்றும் வருமான சமத்துவமின்மை போன்ற முக்கிய பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டிய அவசர தேவையை இது நினைவூட்டுகிறது. ஆதலால் சுற்றுச்சூழல் மாசுபாடும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் சரிசமமாக இருக்க வேண்டும்.

விளம்பரம்

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment