பாக்கிய லட்சுமி சீரியல் ரித்திகாவுக்கு எளிமையாக நடந்து முடிந்த திருமணம்.! புகைப்படம் இதோ.!

பாக்கியலெட்சுமி தொடரில் அம்ருதா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரித்திகாவுக்கு தற்போது திருமணம் முடிந்து அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் இரவு எட்டு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியல் பல சிற்பங்களுக்கு இடையே தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரித்திகா ஆரம்பத்தில் ராஜா ராணி சீசன் 1ல் கார்த்திக்கு தங்கையாக நடித்து அசத்தியிருந்தார். பின்னர் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான்.

பாக்கிய லட்சுமி சீரியல் ரித்திகாவுக்கு எளிமையாக நடந்து முடிந்த திருமணம்.! புகைப்படம் இதோ.! 1

விளம்பரம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சீசன் 2வில் வைல்ட் கார்டு என்ட்ரியாக கலந்து கொண்டார் ரித்திகா. இதன் மூலமாக அவர்களுக்கு நல்ல ரசிகர்கள் கிடைத்தனர். இவருக்கும் KPY பாலா உடன் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகியதால் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் இவர் காமெடி ராஜா கலக்கல் ராணி என்கிற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதற்குப் பிறகு இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாக்கியலட்சுமி தொடரில் அமிர்தா கதாபாத்திரத்தில், முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் எழிலுக்கு ஜோடியாக இவர் நடித்து வருகிறார்.

தொடர்புடையவை  வீடே உங்கள எதிர்த்து நின்னப்ப.. தனி ஆளா இருந்து மிரட்டி விட்டீங்க..அசீமை புகழ்ந்த பிக்பாஸ்.!

பாக்கிய லட்சுமி சீரியல் ரித்திகாவுக்கு எளிமையாக நடந்து முடிந்த திருமணம்.! புகைப்படம் இதோ.! 3

விளம்பரம்

இன்ஸ்டாகிராமில் மிக ஆக்டிவாக இருக்கும் ரித்திகா அடிக்கடி வீடியோக்கள் மட்டும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆக்டிவாக வைத்திருக்கிறார். இவருக்கு திருமணம் நடைபெற உள்ள செய்தி சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இந்த நிலையில் விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக வேலை பார்த்து வரும் வினு என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

 

விளம்பரம்

பாக்கிய லட்சுமி சீரியல் ரித்திகாவுக்கு எளிமையாக நடந்து முடிந்த திருமணம்.! புகைப்படம் இதோ.! 5

விளம்பரம்

Leave a Comment