பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரும் த்ரிஷாவை போலவே அப்படியே மேக்கப் போட்டு தற்போது ஒரு வீடியோவை ஹீமா பிந்து வெளியிட்டு இருக்கிறார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே என்கிற சீரியலில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருப்பவர் ஹீமா பிந்து. இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை தாண்டி ஓடிக்கொண்டிருந்தது. தற்போது இதயத்தை திருடாதே பாகம் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சீசன் 1 மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர்தான் ஹீமா பிந்து. இவர் சஹானா என்ற கதாபாத்திரத்தில் அந்த சீரியலில் நடித்து வந்தார். இவருடன் நவீன் என்பவரும் ஹீரோவாக நடித்து வந்தார். நவீனம் ஹீமா பிந்துவும் காதலித்து வருவதாகவும் விரைவில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் பரவியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஹீமா பிந்து அந்த தகவலை மறுத்தார். நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று விளக்கம் அளித்தார். மேலும் நவீனுக்கும் சன் டிவியில் செய்தி வாசிப்பாளர் கண்மணிக்கும் சமீபத்தில் திருமணம் முடிந்தது. பிறகு எந்த சீரியலிலும் கமிட்டாகாமல் இருந்து வருகிறார் ஹீமா. இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் இவருடைய பாட்டி தாத்தா எல்லாருமே சினிமா துறையை சேர்ந்தவர்கள் என்பதால் இவருக்கும் சினிமா மீது ஆர்வம் வந்துவிட்டது. தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஹீமா அவ்வப்போது ஹீரோயின்கள் போலவே மேக்கப் செய்து அதை தனது instagram பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரும் குந்தவை கதாபாத்திரமான த்ரிஷா போலவே உடை அணிந்து மேக்கப் போட்டுக் கொண்டு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த பலரும் பேசாமல் த்ரிஷாவிற்கு பதிலாக நீங்கள் நடித்திருக்கலாம் என்று கமெண்ட்களை போட்டு வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the Below Video..!
Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7