பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டிருந்த ஜூலி தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கன்னத்தில் முத்தமிட்டால் தொடரில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமாக அறியப்பட்டவர் ஜூலி. இவர் ஆரம்பத்தில் நர்சாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார் .ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பிறகு இவரை “வீரத் தமிழச்சி” என்று அழைத்து வந்தனர். அந்த புகழைக் கொண்டே இவருக்கு பிக் பாஸ் சீசன் 1ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீசனில் இவருக்கும் ஓவியாவுக்கும் நடந்த பிரச்சனையால் இவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது. அதனால் இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். வெளியேறிய பின்பும் இவர் மீது விமர்சனங்கள் குறையாமல் இருந்து வந்தது.

பின்னர் இவர் பிக்பாஸ் அல்டிமேட் இன்னும் 24 மணி நேரம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு சீசன் 1ல் நான் தெரியாமல் பல தவறுகள் செய்து விட்டேன், அதை சரி செய்யும் விதமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்று கூறியிருந்தார். ஆனால் இங்கும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். பின்னர் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் ஜூலி தற்போது ஒரு சீரியலில் கமிட் ஆகி இருக்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது.

ஜீ தமிழில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் கொற்றவை என்னும் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் ஜீலி. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Zee Tamil