விஜய் டிவி பிரபலம் புகழின் பிறந்த நாளுக்காக அவரது மனைவி நாய்க்குட்டி ஒன்றை வாங்கி அவருக்காக பரிசளித்திருக்கும் அழகிய வீடியோவை புகழ் தற்போது தனது youtube பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். சிரிச்சா போச்சு என்ற நிகழ்ச்சியில் பெண்கள் வேடமிட்டு நடித்து வந்தவர் புகழ். இவருக்கு பிரபலத்தை கொடுத்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை விரும்பும் ஒரு ஆளாக மாறிப் போனார். அவரது எதார்த்தமான காமெடியும், உடல் மொழியும், அவரது தலைமுடியும் பலருக்கும் பார்த்தாலே சிரிப்பை வரவழைக்கும். தற்போது பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் புகழ். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.!

தல அஜித்துடன் இணைந்து வலிமை படத்திலும், சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். தற்போது அவர் ஹீரோவாக ஜு கீப்பர் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஓரளவுக்கு முடிந்திருக்கிறது. இதுமட்டுமில்லாமல் இன்னும் சில படங்களில் துணை வேடங்களில் நடித்த ஒப்பந்தமாகி இருக்கிறார். சமீபத்தில் அவருடைய காதலி பென்சியை அவர் கரம் பிடித்திருந்தார். பல ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் கோவிலில் வைத்து எளிமையாக இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு புகழுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

அப்போதே புகழின் மனைவி புகழுக்கு ஜெர்மன் ஷெப்பர்ட் எனப்படும் ஒரு நாய் வகையை பரிசளித்தார். அந்த குட்டி நாயுடன் அவர் விளையாடும் அழகிய வீடியோவை தற்போது தனது youtube வலைதளப் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார். பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ள அந்த வீடியோவை நீங்களும் காண.. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Code Embed Credits: Parattai Pugazh