தனலட்சுமிக்கு எதிராக திரும்பிய மைனா மற்றும் ஷிவின்.! பாவம் தனலட்சுமி.!

அனைவராலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சி கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோக்களில் முதலிடம் வகிக்கிறது. இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கான மக்கள் விரும்பிப் பார்க்கின்றனர். எப்போதும் இல்லாத அளவிற்கு 21 போட்டியாளர்களை கொண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இருந்து தற்போது வரை மூன்று போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். இரண்டாவது வாரம் ஜிபி முத்து தானாக முன் வந்து வெளியேறிவிட, நடன இயக்குனர் சாந்தியை எலிமினேட் செய்து அனுப்பியுள்ளனர்.  மூன்றாவது வாரத்தில் அசல் கோளாறு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். தற்போது நான்காவது எலிமினேஷனாக ஷெரினாவும், ஐந்தாவதாக மஹேஸ்வரியும், ஆறாவதாக நிவாஷினியும் வெளியேற்றப்பட்டுள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனலட்சுமிக்கு எதிராக திரும்பிய மைனா மற்றும் ஷிவின்.! பாவம் தனலட்சுமி.! 1

விளம்பரம்

முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு இந்த முறை இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரம் ஒளிபரப்பும் வகையில் டிஸ்னி ஹாட் ஸ்டார் இல் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதனால் ஹவுஸ் மேட்ஸ் செய்யும் அனைத்து விஷயங்களையும் லைவ்வாக பார்க்க முடிகிறது. கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில் சண்டை, சச்சரவு தொடர்ந்து கொண்டே இருந்தது. மேலும் தொடர்ந்து விதிமீறல்கள் நடந்து வந்தது. இதனால் பலரும் நிகழ்ச்சியை ஒழுங்காக கொண்டு செல்லுமாறு கமலஹாசனுக்கு கோரிக்கை வைக்க, அவரும் வார இறுதி நாட்கள் எபிசோடில் வந்து போட்டியாளர்களை வறுத்து எடுத்து விட்டார். தற்போது 15 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடர்கிறது.

தொடர்புடையவை  இதுதான் உங்க முடிவுனா நீங்க போகலாம் வனிதா.. வனிதாவை வெளியேற்றிய பிக்பாஸ் | BB Ultimate Promo 1

தனலட்சுமிக்கு எதிராக திரும்பிய மைனா மற்றும் ஷிவின்.! பாவம் தனலட்சுமி.! 3

விளம்பரம்

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், இந்த வாரத்திற்கான வீக்லி டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் பிக்பாஸ் வீடு நீதி மன்றமாக மாறியுள்ளது. தனலட்சுமி தனக்காக வாதாடும் படி ஆயிஷாவை கேட்டுக்கொள்கிறார். இந்த வாரம் நான் தலைவர் ஆனால் இந்த வீட்டை வேறு மாதிரி மாற்றிக் காட்டுவேன் என்று சொல்கிறார். தனலட்சுமியின் கருத்தில் ஒரு நியாயம் இருப்பதை உணர்ந்து கொண்ட ஆயிஷா இந்த வழக்கை எடுத்துக்கொள்வதாக கூறினார். பிறகு அந்த வழக்கிற்கு சாட்சியாக மைனா மற்றும் ஷிவினை ஆயிஷா அழைக்கிறார். ஆனால் மைனாவும் ஷிவினும் சாட்சியங்களாக வர மறுத்துவிட்டனர். இதனால் கடுப்பான தனலட்சுமி இனிமேல் என்னுடைய ஆட்டம் வேறு மாதிரி இருக்கும் என்று கூறுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண. ! Watch the below Video.! 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television 

விளம்பரம்

Leave a Comment