தமிழின் முண்ணனி நடிகையாக இருக்கும் ஹன்சிகா தற்போது திருமணத்திற்கு தயாராகி வருகிறார். நேற்று நடந்த ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் சிகப்பு நிறப் புடவையில் அவர் தனது வருங்கால கணவருடன் நடனமாடி இருக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக இருக்கிறது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஹன்சிகா. கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்த இவர், குழந்தைகள் விரும்பி பார்த்த ஷக்கலக்க பூம்பூம் என்ற தொடரின் மூலமாக அறிமுகமானார். பின்னர் 2007 ஆம் ஆண்டு மாப்பிள்ளை என்கிற படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார் நடிகை ஹன்சிகா.

தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். இவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி, மான் கராத்தே, அரண்மனை, மனிதன் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இவர் பார்ப்பதற்கு குஷ்பூ போலவே இருந்ததால் இவரை இவரது ரசிகர்கள் குட்டி குஷ்பூ என்று அழைத்து வந்தனர்.

வருகிற டிசம்பர் நான்காம் தேதி ஹன்சிகாவிற்கு திருமண நடைபெற உள்ளது. தனது நீண்ட நாள் நண்பரும், தொழிலதிபருமான சுஹேல் கத்தூரியாவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் ஹன்சிகா. அதற்காக 450 ஆண்டு காலம் பழமையான ஜெய்ப்பூர் அரண்மணையை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இருவருக்கும் அங்கு வைத்து திருமணம் நடைபெற இருக்கிறது.

சமீபத்தில் பிரான்சில் உள்ள ஈஃபில் டவர் முன்பு நின்று தனது காதலி ஹம்சிகாவிற்கு மோதிரம் மாற்றி தனது காதலை வெளிப்படுத்தினார். இதை தனது நிச்சயதார்த்த புகைப்படமாக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து இருந்தார். திருமண ஒளிபரப்பு உரிமையை நயன்தாரா போல ஹன்சிகாவும் டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது பிரீ வெட்டிங் திருமண நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார். தனது கணவருடன் இணைந்து அந்த நிகழ்ச்சியில் நடனமாடி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. சிகப்பு நிற புடவையில் தனது கணவருடன் இருவரும் நடனம் ஆடி இருக்கும் வீடியோவை அவர்களது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.