சமந்தா ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகவே இல்ல.! அந்த நியூஸே பொய்.! சமந்தா தரப்பு விளக்கம்.!

தமிழின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது தானாக நோய் எதிர்ப்பு சக்தி குறையும் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி பரவி வந்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு இருக்கும் நோய் பற்றிய விவரங்களை பதிவாக பதிவிட்டிருந்தார். அந்த பதிவிற்கு பிறகு சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்து இருந்த சமந்தா, தனக்கு அரிய வகை நோய் இருப்பதாக கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சமந்தா ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகவே இல்ல.! அந்த நியூஸே பொய்.! சமந்தா தரப்பு விளக்கம்.! 1

விளம்பரம்

மையோசெட்டீஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் குறைபாடு உள்ள நோய் இருப்பதாகவும், இது அரிய வகை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நோயோடு போராடிக் கொண்டிருக்கிறேன் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என்று உருக்கமான பதிவு ஒன்றை போட்டிருந்தார். இதன் பின்னர் அவருக்கு அவரது ரசிகர்கள் பலரும் ஆதரவாக இருந்தனர். உங்களுக்கு ஒன்றும் நேராது, விரைவில் மீண்டு வாருங்கள் என்று தங்களது பிராத்தனைகளை தெரிவித்து இருந்தனர். மீண்டும் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை பகிர்ந்து மீண்டு வருவதாக பகிர்ந்து இருந்தார் சமந்தா.

தொடர்புடையவை  ரஜினி இருக்கும் போது விஜயை எப்படி சூப்பர் ஸ்டார்னு சொல்லுவீங்க? சரமாரியாக கேட்ட நிருபர்கள்.!

சமந்தா ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகவே இல்ல.! அந்த நியூஸே பொய்.! சமந்தா தரப்பு விளக்கம்.! 3

விளம்பரம்

இந்த நிலையில் இன்று மீண்டும் உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அந்த தகவல் ஏதும் உண்மையில்லை என்றும் அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் என்றும் சமந்தாவின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். அந்த செய்தியை நீங்களும் காண.! Watch the below video.! 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Thanthi TV

விளம்பரம்

Leave a Comment