Iravin Nizhal Making வீடியோ.! எவ்வளவு கஷ்டப் பட்டு எடுத்து இருக்காங்கனு பாருங்க.!

இரவின் நிழல் (Iravin nizhal) படத்தின் மேக்கிங் வீடியோவை தற்போது நடிகர் பார்த்திபன் வெளியிட்டு இருக்கிறார். தமிழ் திரை உலகில் வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்து அதில் வெற்றி பெறுபவர் நடிகர் பார்த்திபன். அவ்வாறு அவர் எழுதி, இயக்கி, நடித்த ஒரு படம்தான் iravin nizhal. இந்தப் படம் கடந்த ஜூலை 15ஆம் தேதி வெளியாகியிருந்தது. இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், யூட்யூப் பிரபலம் பிரிகிடா, ரேகா நாயர் போன்ற பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். இந்தப் படத்தை 64 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருந்த நகரும் மற்றும் நகராத செட்டுகள் மூலமாக ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருந்தது. இந்தப் படம் வெளியான போது பலரும் இந்த படத்தை வரவேற்று பாராட்டி இருந்தனர். இந்த படத்திற்கு எதிர்மறை விமர்சனங்களும் எழுந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

iravin nizhal

விளம்பரம்

இந்தப் படத்தை முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் என்று பார்த்திபன் அறிவித்திருந்தார். ஆனால் அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்த படம் இரண்டாவது சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம், ஆனால் பார்த்திபன் பொய் சொல்லுவதாக பல விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் சமீபத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியான போது, அதிலும் இயக்குனர் பார்த்திபன் இது முதல் நான் லீனியர் என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த படம் முதல் நான் லீனியர் படம் தான் என்று மீண்டும் ஆணித்தரமாக விளக்கம் அளித்து பார்த்திபன் ஒரு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் நான் பொய் சொல்லுவது போல் கூறுவது தனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று அவர் வருத்தத்துடன் பேசி இருந்தார்.

தொடர்புடையவை  சரிகா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.! நீண்ட நாளுக்கு பின் திரையில் ரீ என்ட்ரி கொடுத்த சரிகா.!

iravin nizhal

விளம்பரம்

இந்த நிலையில் பார்த்திபன் இன்று ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் இரவின் நிழல் படத்திற்காக எப்படி செட் அமைத்தார்கள் என்பதை விளக்கும் ஒரு காணொளியை பகிர்ந்திருக்கிறார். அதில் கலை இயக்குனர் மிகவும் கஷ்டப்பட்டு எப்படி கோவில்கள் போன்ற செட்டையும் படத்திற்கான மொத்த செட்டையும் அமைத்தார் என்றும், 75 நாட்களாக தாங்கள் எவ்வாறு கஷ்டப்பட்டோம் என்பது குறித்தும் விளக்கி இருக்கிறார். இந்த வீடியோவிற்கு கீழே கமெண்ட் செய்த பார்த்திபன் ரசிகர்கள் உண்மையிலேயே உங்கள் அனைவரின் உழைப்பு பாராட்டத்தக்கது. இந்த படத்திற்கு கண்டிப்பாக விருது வழங்கியிருக்க வேண்டும், உழைப்பு என்றைக்கும் வீண் போகாது கவலைப்படாதீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். Watch Iravin Nizhal Making video below.!

விளம்பரம்

 

YouTube Video Code Embed Credits: Parthiban Radhakrishnan

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment