இனியாவின் தங்கையின் முதல் பிறந்தநாள்.! மோசமாக விமர்சித்த நெட்டிசன்கள்.! பதிலடி கொடுத்த இனியா

பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நேஹாவிற்கு சமீபத்தில் தங்கை பிறந்துள்ளது. அந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இதை நெட்டிசன்கள் சிலர் கேலி செய்து வந்த நிலையில் நேஹா தற்போது பதிலடி கொடுத்து வருகிறார். பாக்கியலெட்சுமி சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நேஹா. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது துணை வேடங்களில் நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலில் ராதிகாவின் கடைசி மகளாக நடித்திருந்தார். அந்த சீரியலில் இவர் தேனு கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனங்களில் இடம் பிடித்தார். கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் நேஹா. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள் என்கிற சீரியலில் முதன்முதலாக நடித்தார்.

இனியாவின் தங்கையின் முதல் பிறந்தநாள்.! மோசமாக விமர்சித்த நெட்டிசன்கள்.! பதிலடி கொடுத்த இனியா 1

விளம்பரம்

தொடர்ந்து இவர் வாணி ராணி, பிள்ளை நிலா, சித்தி 2 போன்ற பல நாடகங்களில் நடித்திருக்கிறார். பின்னர் இவர் நாரதன் என்கிற படத்திலும் ஜாக்சன் துரை என்கிற படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவருக்கு பாக்கியலட்சுமி சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாக்யாவின் கடைசி மகளாக இனியா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இனியாவை சுற்றியே பாக்கியலட்சுமி கதை நகர்ந்து வருகிறது. தனது தாய் பாக்கியாவை விட்டுவிட்டு, தனது தந்தை கோபியுடன் சென்று அவரது இரண்டாவது மனைவியுடன் வசிக்கிறார் இனியா. இப்படியாக கதை நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் 20 வயதாகும் நேஹாவுக்கு கடந்த மார்ச் மாதம் தங்கை பிறந்துள்ளது. அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருந்தார் நேஹா.

தொடர்புடையவை  நானி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தசரா படம் எப்படி இருக்கு..? பொதுமக்கள் கூறிய விமர்சனம் இதோ.!

இனியாவின் தங்கையின் முதல் பிறந்தநாள்.! மோசமாக விமர்சித்த நெட்டிசன்கள்.! பதிலடி கொடுத்த இனியா 3

விளம்பரம்

20 வயதாகும் நேஹாவுக்கு தங்கை பிறந்திருப்பதை பலரும் வாழ்த்தியிருந்தனர். ஆனால் சிலர் இந்த வயதில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா? என்று இவரது அம்மாவை விமர்சித்து இருந்தனர். கல்லூரி படிக்கும் வயதில் ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு இந்த வயதில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா என்று நேஹாவின் அம்மாவை பலரும் விமர்சித்து இருந்தனர்.அதற்கு நேற்று வீடியோ வெளியிட்டு பதிலடி கொடுத்திருக்கிறார் நேஹா. குப்பைத்தனமாக பேசுபவர்கள் பற்றி தான் எப்போதும் கவலைப்பட போவதில்லை எனவே நீங்கள் இங்கு வந்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் காலேஜ் படிக்கிற பெண் வைத்து இருந்தாலும் யாராக இருந்தாலும், எந்த வயதில் வேணாலும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் தவறு கிடையாது. அது போன்ற எண்ணத்தை தயவுசெய்து மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Little Talks

 

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment