நயன்தாராவின் மாமியார் தற்போது நயன்தாரா பற்றி சில விஷயங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார்ராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளில் 75 படங்களுக்கும் மேலாக நடித்து யாரும் செய்ய முடியாத சாதனையை செய்து இருக்கிறார் நயன்தாரா. இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான படம் காத்து வாக்குல ரெண்டு காதல். அதற்கு பின்னர் அவர் தற்போது கனெக்ட், கோல்டு போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கனெக்ட் படத்தை அவரது கணவர் விக்னேஷ் சிவன் தயாரித்து வருகிறார்.

தனது ஏழு ஆண்டுகால காதலரான விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் சென்னையில் வைத்து திருமணம் செய்து கொண்டார் நயன்தாரா. அவர்களுக்கு தற்போது இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். அந்த புகைப்படங்களை சமீபத்தில் விக்னேஷ் சிவன் தனது instagram பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இருவரும் வாடகைத்தாய் முறையில் பெற்றோர்கள் ஆகியிருக்கின்றனர். இந்த பிரச்சனைகள் எல்லாம் ஓய்ந்த பிறகு இருவரும் தங்களது பட வேலைகளில் பிஸியாக இருக்கின்றனர். நயன்தாரா தற்போது ஹிந்தியில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் சில படங்களை தயாரித்து வருகிறார். இந்த நிலையில் நயன்தாராவின் மாமியார் நயன்தாரா பற்றி சில கருத்துக்களை கூறி இருக்கிறார்.

அதில் நயன்தாரா வீட்டில் வேலை செய்யும் பெண் ஒருவர் தனக்கு 4 லட்சம் கடன் இருந்ததாக கூற உடனே நயன்தாரா நான்கு லட்சத்தை எடுத்துக் கொடுத்து உங்களுடைய கடனை அடைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியதாக கூறினார். மேலும் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் அனைவரும் நயன்தாரா சொன்னால்தான் காபி கூட குடிப்பார்கள் என்று பேசினார். அதேபோல் நயன்தாராவின் அம்மாவும் உதவி செய்வதில் மிகச்சிறந்தவர். அவர் ஒருமுறை தனது வீட்டில் வேலை செய்பவர்கள் கஷ்டப்படுவதை பார்த்து தங்க வளையல்களை கழட்டி கொடுத்தார் என்று தனது சம்மந்தி பற்றியும் பெருமையாக பேசி இருக்கிறார். அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the Below Video.!
Youtube Video Code Embed Credits: Polimer News