பாரதிகண்ணம்மா சீரியலில் நாம் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கிளைமாக்ஸ் காட்சிகள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் பெறுவதற்காக டெல்லிக்குச் சென்ற பாரதிக்கு அதிர்ச்சியான முடிவுகள் கிடைத்திருக்கின்றன. இதனால் கதறி கதறி அழுது கொண்டிருக்கிறார் பாரதி. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இரவு 9 மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒரு தொடர்தான் பாரதி கண்ணம்மா. இந்த தொடருக்கு ஆரம்பத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள். பின்னர் கதையின் போக்கின் காரணமாக ரசிகர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, தற்போது பலர் இந்த நாடகத்தையே பார்ப்பதை நிறுத்திவிட்டனர். இருந்தபோதிலும் சிலர் ப்ரோமோவை பார்த்துவிட்டு இந்த சீரியல் எப்போது முடியும் என்று ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாரதிக்கு தனக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகள் தன்னுடையதே இல்லை என்ற சந்தேகம் இருந்து வந்தது. இதற்காக அவர் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்காமல் இத்தனை காலம் காலம் தாழ்த்தி வந்தார். ஒரு கட்டத்தில் அனைவரும் சொல்வது போல் இந்த குழந்தைகள் தனக்கு பிறந்தவை தானா? என்பதை தெரிந்து கொள்வதற்காக டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துப் பார்க்கிறார். ஆனால் அதிலும் பல தடைகள் அவருக்கு வருகிறது. இதனால் டெல்லிக்கு சென்று ஆய்வகத்தில் நேரில் சென்று தன்னுடைய ரிசல்ட் வாங்குவதற்காக பாரதி சென்றார். அங்கு சென்று இருக்கும் பாரதிக்கு அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்திருக்கின்றது. மருத்துவர், ஹேமா லட்சுமி மற்றும் உங்கள் மூவரின் டிஎன்ஏ 100 சதவீதம் ஒத்துப் போகிறது என்கிற தகவலை சொல்ல, அதிர்ச்சியில் உறைகிறார் பாரதி. இத்தனை நாள் கண்ணம்மாவை ஏமாற்றி விட்டோமே என்று உடைந்து அழுகிறார் பாரதி.
இந்த ப்ரோமோ வெளியான பின்பு பலரும் கமெண்டில் நாடகம் முடியப்போகிறது என்று தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். ஒரு நாடகம் முடியப்போகிறதே என்று ரசிகர்கள் கொண்டாடும் ஒரே நாடகம் பாரதி கண்ணம்மாவத்தான் இருக்க முடியும். இந்த இயக்குனர் இந்த கதையை இழு இழுவென இழுத்து, அரைத்த மாவையே அரைத்து ரசிகர்களை போர் அடிக்க வைத்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு வழியாக டிஎன்ஏ டெஸ்ட் முடிவுகள் வந்துவிட்டது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the Below Video..!
Youtube Video Code Embed Credits: Vijay Television