யோகிபாபு, ஓவியா, KPY பாலா நடித்துள்ள “பூமர் அங்கிள்” படத்தின் ட்ரைலர் வெளியானது.!

நடிகர் யோகிபாபு நடிப்பில் உருவாகியிருக்கும் பூமர் அங்கிள் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. திரைத்துறையில் பல கடினமான பாதைகளைத் தாண்டி இன்று முண்ணனி காமெடியனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் யோகி பாபு. ஆரம்பத்தில் விஜய் டிவியின் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் துணை இயக்குனராக வாழ்க்கைய ஆரம்பித்தவர் பாபு. பின்னர் அவர் யோகி என்ற படத்தில் நடித்த பின்பு யோகி பாபு என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். பின்னர் அன்று தொடங்கி அவர் பல படங்களில் நடித்துள்ளார். அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் மான் கராத்தே தான். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து காமெடி செய்தார். பின்னர் இவர் சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

யோகிபாபு, ஓவியா, KPY பாலா நடித்துள்ள "பூமர் அங்கிள்" படத்தின் ட்ரைலர் வெளியானது.! 1

விளம்பரம்

தற்போது அவர் கைவசம் பல படங்களில் நடித்து வருகிறார். அந்தகன், அயலான், பூச்சாண்டி, சுந்தரா ட்ராவல்ஸ் 2, ஓ மை கோஸ்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இதில் பூமர் அங்கிள் படத்தின் படபிடிப்புக்கள் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து பிக பாஸ் புகழ் ஓவியாவும் நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் எம்.எஸ்.சுவதீஷ் இயக்கி இருக்கிறார். தரம் பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சுபாஷ் தண்டபாணி ஒளிப்பதிவு செய்துள்ளார். அன்கா மீடியா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியானது. அதில் ஏஜெண்ட் நேசமாக யோகி பாபுவும், ஏஜெண்ட் வேம்புலியாக ரோபோ ஷங்கரும் நடித்துள்ளனர்.

தொடர்புடையவை  வீரம் படத்துல வந்த இந்த குழந்தையை ஞாபகம் இருக்கா.? இப்ப எப்படி இருக்காருன்னு பாருங்க.!

யோகிபாபு, ஓவியா, KPY பாலா நடித்துள்ள "பூமர் அங்கிள்" படத்தின் ட்ரைலர் வெளியானது.! 3

விளம்பரம்

தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த ட்ரைலரை காண..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: MRT Music

விளம்பரம்

Leave a Comment