இது நம்ம ஜீவாவின் லவ் டுடே.! ஜீவா நடித்துள்ள “வரலாறு முக்கியம்” படத்தின் ட்ரைலர் வெளியானது.!

நடிகர் ஜீவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் தான் “வரலாறு முக்கியம்”. இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. பிரபல தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரியின் இளைய மகன் தான் நடிகர் ஜீவா. இவர் 2003 ஆம் ஆண்டு ஆசை ஆசையாய் என்கிற படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார். அதன் பின்னர் தித்திக்குதே என்ற படம் தான் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதன் பின்னர் ராம் படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படங்களுக்குப் பிறகு கற்றது தமிழ், கோ, நண்பன், என்றென்றும் புன்னகை, கலகலப்பு 2 போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் காபி வித் காதல். தற்போது இவர் கைவசம் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இது நம்ம ஜீவாவின் லவ் டுடே.! ஜீவா நடித்துள்ள "வரலாறு முக்கியம்" படத்தின் ட்ரைலர் வெளியானது.! 1

விளம்பரம்

ஒன்று வரலாறு முக்கியம், மற்றொரு படம் கோல்மால். இது மட்டுமல்லாமல் ஆஹா தமிழ் என்கிற ஓடிடி தளத்தில் சர்க்கார் வித் ஜீவா என்கிற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் இந்த வரலாறு முக்கியம் என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஜீவாவுடன் இணைந்து காஷ்மிரா பர்தேசி நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், கே எஸ் ரவிக்குமார், டிடிவி கணேஷ் போன்ற பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. சீரியஸ் கதைகளில் நடித்து வரும் ஜீவா இந்த முறை காமெடி கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

தொடர்புடையவை  தோல்வி படத்துக்கு பிறகு வெற்றி - நடிகர் சிவகார்த்திகேயன்!!

இது நம்ம ஜீவாவின் லவ் டுடே.! ஜீவா நடித்துள்ள "வரலாறு முக்கியம்" படத்தின் ட்ரைலர் வெளியானது.! 3
முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் இந்த படத்தின் டிரைலரை பார்க்க கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

விளம்பரம்

 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Saregama Tamil

விளம்பரம்

Leave a Comment