ஹே இனியா வெளிய வாடி.! ராதிகா வீட்டிற்குள் புகுந்து செம்ம கெத்து காட்டிய பாக்கியா.!

இனியாவை பார்ப்பதற்காக பாக்கியா ராதிகாவின் வீட்டிற்கு வந்துள்ள ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இனியா பள்ளியிலிருந்து பிக்னிக் சென்றிருந்தார். அப்போது அந்த பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த விபத்தும் ஏற்படவில்லை. இந்த செய்தியை கேட்ட பாக்யா மற்றும் கோபி இருவரும் பள்ளிக்கு வருகின்றனர். ஆனால் விரைந்து வந்த கோபி இனியாவை பாக்கியாவின் கண்ணில் படாமல் அழைத்துச் சென்று விட்டார். இதை அறிந்து கொண்ட பாக்யா கோபியின் காரை துரத்திக் கொண்டே ஓடுகிறார். ஆனால் கோபி வேகமாக காரை எடுத்து சென்று விட்டார். இதனால் தனது மகள் இனியாவை பார்க்க முடியாமல் நடுரோட்டிலையே கதறி அழுதுக் கொண்டிருக்கிறார் பாக்யா. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

ஹே இனியா வெளிய வாடி.! ராதிகா வீட்டிற்குள் புகுந்து செம்ம கெத்து காட்டிய பாக்கியா.! 1

விளம்பரம்

தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் இனியாவை ராதிகாவின் வீட்டிற்கு சென்று பாக்யா பார்க்கிறார். அப்போது அங்கு சோகமாக அமர்ந்திருக்கும் ராம மூர்த்தியிடம் நான் இனியாவை பார்க்க வேண்டும் என்று கேட்க, ராமமூர்த்தி இனியாவை அழைக்கிறார். ஆனால் கோபி அறையில் இருக்கும் இனியாவை வெளியே செல்ல வேண்டாம் என்று தடுத்து விடுகிறார். இந்த கூச்சலை கேட்டு சமயலறையில் இருந்து வெளியே வரும் ராதிகா பாக்கியாவை பார்த்து அதிர்ச்சியில் உறைகிறார். கோபி ராதிகாவை திருமணம் செய்ததில் இருந்து ராதிகாவும் பாக்கியாவும் பேசிக் கொள்வதில்லை. முதல் முறையாக ராதிகாவின் வீட்டிற்கு பாக்கியா வந்திருக்கிறார். அதுவும் தனது மகள் இனியாவை பார்த்ததற்காக. இனியாவும் தன் தாயை பார்ப்பதற்காக வெளியே செல்ல வேண்டும் என்று துடிக்கிறார்.

தொடர்புடையவை  என்ன மன்னிச்சிடுங்க அமிர்தா.! உங்க life-ல இனிமே நான் இல்ல.! அமிர்தாவிடம் மன்னிப்பு கேட்ட எழில்.!

ஹே இனியா வெளிய வாடி.! ராதிகா வீட்டிற்குள் புகுந்து செம்ம கெத்து காட்டிய பாக்கியா.! 3

விளம்பரம்

இனி என்ன நடக்கப் போகிறது? இனியாவை பாக்கியா சந்திப்பாரா? பாக்கியாவை ராதிகா உள்ளே அழைப்பாரா என்பதெல்லாம் இன்றைய எபிசோட்டில் தெரிய வந்துவிடும். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the below video.!

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment