லவ் டுடே பட ஹீரோயின் இவானாவுடன் இணைந்து ரஞ்சிதமே பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்ட ஆஜீத்.!

சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த திரைப்படம் தான் லவ் டுடே. இந்த படத்தின் கதாநாயகி இவானா, தற்போது விஜய் டிவி பிரபலம் ஆஜித்துடன் இணைந்து ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சிறுவயதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றவர் ஆஜித். சிறு வயதிலேயே இவர் அணிந்து வரும் உடைக்காகவும், பாடும் திறமைக்காகவும் இவரை ரசித்தவர்கள் பலர் இருக்கிறார்கள். சிறுவயதிலிருந்தே பாடும் போதும் இவரால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. இருந்தாலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்போது ஆல்பங்களை பாடி வெளியிட்டு வருகிறார். மேலும் ஒரு சில படங்களிலும் பின்னணி பாடி இருக்கிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

லவ் டுடே பட ஹீரோயின் இவானாவுடன் இணைந்து ரஞ்சிதமே பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்ட ஆஜீத்.! 1

விளம்பரம்

பின்னர் வாய்ப்புகள் குறைந்த காரணத்தினால் பிக்பாஸ் சீசன் 4ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார் அஜீத். இந்த நிகழ்ச்சியின் மூலமாக பலருக்கும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் கேபியுடன் இவருக்கு காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஆனால் அந்த கருத்தை இவர் முற்றிலுமாக மறுத்தார். அவர் எனக்கு சகோதரி போன்றவர், அந்த மாதிரி எல்லாம் எனக்கு எந்த உணர்வும் இல்லை என்று விளக்கம் அளித்திருந்தார் ஆஜித். இந்த நிலையில் ஆஜித்துக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து வருகிறது. சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் லவ் டுடே படத்தில் ரெவி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆஜித். இந்த படத்திற்குப் பின்னர் ஆஜித்துக்கு ரசிகர் பட்டாளங்கள் பெருகி வருகிறது. இந்த நிலையில் அவர் இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

தொடர்புடையவை  ஐ லவ் யூ டி பொண்டாட்டி.! ஸ்னேகாவின் 42வது பிறந்த நாளில் Cute ஆக வாழ்த்திய பிரசன்னா. !

லவ் டுடே பட ஹீரோயின் இவானாவுடன் இணைந்து ரஞ்சிதமே பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்ட ஆஜீத்.! 3

விளம்பரம்

அதில் லவ் டுடே படத்தின் கதாநாயகி இவானாவுடன் இணைந்து நடனமாடி இருக்கிறார். வாரிசு படத்தில் இருந்து சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் ரஞ்சிதமே பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்டிருக்கிறார் ஆஜித். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. பலரும் ஆஜித்தின் நடனத்தை பாராட்டி வருகின்றனர் நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment