குத் வித் கோமாளியில் கலந்து கொண்டு பலரின் உள்ளங்களை கவர்ந்துள்ளவர் ஸ்ருதிகா. இவர் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். முதல் படமே தமிழில் சூர்யாவுடன் ஸ்ரீ என்ற படத்தில் அறிமுகமானார். முதல் படமே தோல்வியை சந்தித்தது. இருந்தாலும் மனம் தளராமல் நளதமயந்தி, ஆல்பம், தித்திக்குதே படங்களில் நடித்தார். இந்த படங்களும் தொடர் தோல்வியை சந்திக்கவே திரைத்துறையில் இருந்து முற்றிலும் விலகிவிட்டார். ஆனால் இவர் நடித்த செல்லமே செல்லம் என்றாயடா பாடல் இன்றளவும் பிரபலமாக இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பின்பு ஸ்ருதிகாவிற்கு சின்னத்திரையில் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. குத் வித் கோமாளியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினார். முதல் பரிசையும் தட்டி சென்றார். தான் நடித்த படங்கள் அனைத்துமே தோல்விதான் என்று பல பேட்டிகளில் அவரே சொல்லி சிரிப்பார். குத் வித் கோமாளிக்கு வந்த பிறகு ஸ்ருதிகாவின் செல்வாக்கு சற்று உயர்ந்துள்ளது என்றே கூறலாம். அவரின் வெள்ளந்தியான பேச்சும், சிரிப்பும், குரேஷியுடன் சேர்ந்து அவர் செய்யும் காமெடிகள் அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது.

தற்போது ஸ்ருதிகாவும் ஜிபி முத்துவும் இணைந்து ஒரு ஹோட்டல் திறப்பு விழாவுக்கு சென்று உள்ளனர். அங்கு அவர்க அந்த ஹோட்டலில் பரிமாறப்படும் உணவுகளை ருசிபார்த்து உள்ளனர். அதை வீடியோவாக எடுத்து ஸ்ருதிகா தனது youtube பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். சாப்பிடும் போது ஸ்ருதிகாவும் ஜிபி முத்துவும் செம்ம காமெடி செய்துள்ளனர். அந்த வீடியோவை நீங்களும் காண .! Watch the below Video.!
Youtube video code embed credits: Shrutika Arjun