
திரையுலகம் டிஜிட்டல் தளத்துக்கு மாறி விட்டது அதன் வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது. திரைப்படங்களில் பிஸியாக நடிப்பவர்களும், வாய்ப்பில்லாத சூழலில் பெரும்பாலான நடிகைகளும் தற்போது வெப் சீரிஸில் நடிக்க . ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன், நித்யா மேனன், சுனேனா போன்றவர்கள் வெப் சீரிஸாக நடிக்க ஒப்பு கொண்டு நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் நடிகை சமந்தாவும், ‘தி ஃபேமலி மேன் 2’ என்ற வெப் சீரிஸில் இணைந்து நடித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து நடிகை தமன்னா வெப் சீரிஸிக்கு நடிக்க முடிவெடுத்து உள்ளார். ‘தி நவம்பர் ஸ்டோரி’ என்ற வெப் சீரிஸில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் தமன்னா. திரைப்பட இயக்குனர் ராம் சுப்ரமணியம் இதனை இயக்க இருக்கிறார்.
தமன்னா சமீபத்தில் விஷாலுடன் ‘ஆக்ஷன்’ படத்திலும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன், ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ படத்திலும் நடித்துள்ளார். இதையடுத்து இருமொழியிலும் புதிய படங்கள் எதிலும் அவர் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.