தளபதிக்காக சிம்பு பாடிய பாடல்.! மரண மாஸாக வெளியானது வாரிசு 2nd சிங்கிள் “தீ”.!

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் வாரிசு. இந்த படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் பாடல் தீ வெளியாகியுள்ளது. இந்த பாடலை சிம்பு பாடியிருக்கிறார். வாரிசு படம் தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. தெலுங்கு இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், குஷ்பூ, பிரபு, சரத்குமார், யோகி பாபு போன்ற பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஆக்ஷன், எமோஷனல், நட்பு, காதல் என அனைத்தும் கலந்த கலவையாக இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை தில் ராஜு தயாரித்து இருக்கிறார். படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்!

தளபதிக்காக சிம்பு பாடிய பாடல்.! மரண மாஸாக வெளியானது வாரிசு 2nd சிங்கிள் "தீ".! 1

விளம்பரம்

இந்தப் படத்தின் மூலமாக முதன்முறையாக விஜய் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் தமன். தமனை பற்றி இயக்குனர் வம்சி கூறும் பொழுது, தமன் எந்த அளவு அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி இருக்கிறார் என்பதை வாரிசு படத்தின் பாடல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று சமீபத்தில் பேசியிருந்தார். இதனால் தமனின் இசை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் சமீபத்தில் வாரிசு படத்தில் இருந்து “ரஞ்சிதமே” என்கிற முதல் பாடலின் லிரிக் வீடியோவை படக் குழு வெளியிட்டு இருந்தது. இந்த பாடலை இளைய தளபதி விஜயே பாடி இருக்கிறார். இந்த பாடல் சுமார் 80 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி இருந்தது .

தொடர்புடையவை  "TRP'க்காக சில்லறத்தனமாக இறங்கிய சன் டிவி.....வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்"!!

தளபதிக்காக சிம்பு பாடிய பாடல்.! மரண மாஸாக வெளியானது வாரிசு 2nd சிங்கிள் "தீ".! 3

விளம்பரம்

வாரிசு படம் அஜித்தின் துணிவு படத்துடன் மோத இருக்கிறது. வரும் பொங்கலுக்கு இரண்டு படங்களும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது வாரிசு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான தீ பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை சிம்பு பாடி இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண.! Watch the below video.! 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: T-Series

விளம்பரம்

Leave a Comment