உடல்நலக் குறைவால் சமீபத்தில் காலமான ஹரி வைரவன் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அவர் கடைசியாக தனக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதாகவும், யாருக்கும் தெரியாமல் தான் அவருக்கு உதவியதாகவும் விஷ்ணு விஷால் வருத்தத்துடன் தெரிவித்தார். 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு என்கிற படத்தில் விஷ்ணு விஷாலின் நண்பராக நடித்தவர் ஹரி வைரவன். மதுரையைச் சேர்ந்த இவர், அதன் பிறகு குள்ளநரி கூட்டம், நான் மகான் அல்ல போன்ற மூன்றே படங்களில் தான் நடித்திருக்கிறார். சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த அவர் சமீபத்தில் கோமா நிலைக்குக் கூட சென்று விட்டார். கோமாவில் இருந்து திரும்பிய பின் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்த அவர், தனக்கு உதவி செய்யுமாறு பலரையும் கேட்டுக்கொண்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் விஷ்ணு விஷால், பிளாக் பாண்டி, கார்த்திக் போன்ற பலர் ஹரி வைரவனுக்கு உதவி செய்து வந்தனர். இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல் கை, கால்கள், முகம் என அனைத்தும் வீங்கத் தொடங்கியது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் திடீரென மரணம் அடைந்து விட்டார். அவரது இறுதிச் சடங்கிற்கு கூட யாரும் செல்லவில்லை என்று நெட்டிசன்கள் பலரும் பிரபலங்களை திட்டி தீர்த்து வந்தனர்.

மேலும் கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் சிலர், ஹரி வைரவனுக்கு உதவவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்தனர். இதைத் தொடர்ந்து விஷ்ணு விஷாலின் முதல் படமான வெண்ணிலா கபடி குழுவில் நடித்த ஹரிக்கு என்ன உதவி செய்தீர்கள் என்று விஷ்ணு விஷாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது பேசிய விஷ்ணு விஷால் நான் செய்த உதவி யாருக்கும் தெரியாது, அவர் கடந்த வாரம் அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் கூட என்னிடம் இருக்கிறது. என்னை எப்பொழுதும் பாசமாக மாப்பிள்ளை என்று தான் அழைப்பார். அவரின் மனைவியிடம் நான் தொலைபேசியில் பேசினேன். அந்தக் குழந்தையின் முழு படிப்புச் செலவையும் நானே ஏற்கிறேன் என்று பெருந்தன்மையாக பேசினார் விஷ்ணு. மேலும் அவர் இறந்தது குறித்து பேசும் போது அவர் மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டார். அவரின் அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Trend Talks