வயல்வெளியில் காடை பொறித்து விவசாய வேலை பார்ப்பவர்களுக்கு விருந்து வைத்த கனிகா.!

கவிஞர் சிநேகனின் மனைவியும் சின்னத்திரை நடிகையுமான கனிகா தற்போது வயலில் வேலை செய்பவர்களுக்கு காடை வறுத்து அதை பரிமாறி இருக்கிறார். அந்த வீடியோவை தனது youtube பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். தமிழ் திரை உலகில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்களில் சினேகன் மற்றும் கன்னிகாவும் ஒருவர். சினேகனை பற்றி நமக்கு அறிமுகம் தேவையில்லை, பல நல்ல பாடல்களை தமிழ் திரையுலகருக்கு கொடுத்த பெருமை அவரை சேரும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வயல்வெளியில் காடை பொறித்து விவசாய வேலை பார்ப்பவர்களுக்கு விருந்து வைத்த கனிகா.! 1

விளம்பரம்

ராம் படத்தில் வரும் ஆராரிராரோ, பாண்டவர் பூமியில் வரும் அவரவர் வாழ்க்கையில் போன்ற பல நல்ல பாடல்களை அவர் எழுதியிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 1ல் கலந்து கொண்ட பின்னர் தான் இவரைப் பற்றிய அறிமுகம் பலருக்கும் கிடைத்தது. சீசன் 1ல் இவர் இரண்டாவது இடத்தை பிடித்தார் .ஆனால் இவரால் வெற்றி பெற முடியவில்லை. பிக்பாஸ்க்கு பிறகு வெளியே வந்த இவர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார். மேலும் அந்த கட்சியின் சார்பில் இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியும் அடைந்திருக்கிறார்.

தொடர்புடையவை  கணவருடன் செம்ம ரொமான்டிக் ஆக Photoshoot நடத்திய ரித்திகா.! வெளியான அழகிய புகைப்படங்கள்.!

வயல்வெளியில் காடை பொறித்து விவசாய வேலை பார்ப்பவர்களுக்கு விருந்து வைத்த கனிகா.! 3

விளம்பரம்

பின்னர் சின்னத்திரை நடிகை கன்னிகாவை அவர் திருமணம் செய்து கொண்டார். கன்னிகாவும் சினேகனும் எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் கமலஹாசன் முன்னிலையில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் இடையே 10 வயது வித்தியாசம் இருக்கிறது. இதை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வந்தனர். அப்பா மகள் போல் இருக்கிறீர்கள், உங்களை பார்த்தால் கணவன் மனைவி போல் இல்லை என்று அவர்கள் கலாய்த்து வந்தனர். ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து சந்தோஷமான வாழ்க்கையை இருவரும் வாழ்ந்து வருகின்றனர்.

வயல்வெளியில் காடை பொறித்து விவசாய வேலை பார்ப்பவர்களுக்கு விருந்து வைத்த கனிகா.! 5
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கன்னிகா, அடிக்கடி புகைப்படங்கள் வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். இவர் தற்போது தனது youtube பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றி இருக்கிறார். அதில் வயல்வெளிக்கு செல்லும் அவர் அங்கு வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்காக காடைகளை வறுத்து 65 போல செய்து, வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு வழங்குகிறார். அந்த வீடியோவை பார்த்த பலரும் கனிகா சமையலிலும் நிபுணர் தான் போல என்று அவரை பாராட்டி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண…! Watch the below video.!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Sneham Talks

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment