லவ் டுடே படத்தில் இருந்து “சொல்லுங்க மாமா குட்டி” பாடலின் முழு வீடியோ வெளியானது.!

பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே படத்தில் இருந்து “சொல்லுங்க மாமா குட்டி” பாடலின் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழின் இளம் இயக்குனராக இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய படம் தான் கோமாளி. 90ஸ் கிட்ஸ்ன் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் ரசிகர்களே மிகப்பெரிய வரவேற்பு பெற்று பல கோடிகளை குவித்து சாதனை படைத்திருந்தது. இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் பிரதீப் ரங்கநாதன் மீண்டும் இயக்கி இருக்கும் படம் தான் லவ் டுடே. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

லவ் டுடே படத்தில் இருந்து "சொல்லுங்க மாமா குட்டி" பாடலின் முழு வீடியோ வெளியானது.! 1

விளம்பரம்

இந்த படம் 2கே கிட்ஸ்களின் காதலை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கிறது. இந்த படம் வெளியாகி மிகப் பிரமாண்டமான வரவேற்பை பெற்று இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.  இந்தப் படத்தின் கதாநாயகனாக பிரதீப் ரங்க நாதனே நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இவானா நடித்திருக்கிறார். இவர்களுடன் சேர்ந்து யோகி பாபு, சத்யராஜ், ராதிகா உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கல்பாத்தி எஸ் அகோரம் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. கடந்த நவம்பர் 4ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. முதல் நாளே மூன்று கோடி அளவில் வசூல் செய்த இந்த படம், இரண்டாவது நாள் 5.35 கோடியும், மூன்றாவது நாள் 6.25 கோடியும் வசூல் செய்திருந்தது.

தொடர்புடையவை  "நானே வருவேன் ரிலீஸ்..தப்பு கணக்கு போடும் தனுஷ்..எச்சரிக்கும் கோலிவுட் வட்டாரங்கள்"

லவ் டுடே படத்தில் இருந்து "சொல்லுங்க மாமா குட்டி" பாடலின் முழு வீடியோ வெளியானது.! 3
11 வது நாள் முடிவில் இந்த படம் 40 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து இருந்தது.தற்போது வரை உலகம் முழுவதும் 50 கோடி வசூலை பெற்று இந்த படம் முன்னேறி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து முக்கிய பாடலான “சொல்லுங்க மாமா குட்டி” பாடலின் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the below video.!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Sony Music South

விளம்பரம்

Leave a Comment