ஹீரோவாக அவதாரம் எடுத்த ராபர்ட் மாஸ்டர்.! புதர் படத்தின் ட்ரைலர் வெளியானது.! வேற லெவல் ட்ரைலர். !

ராபர்ட் மாஸ்டர் ஹீரோவாக நடித்திருக்கும் புதர் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்ட முக்கியமான போட்டியாளர் தான் ராபர்ட் மாஸ்டர். இவர் குழந்தை நட்சத்திரமாக அழகன் என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானார். பின்னர் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து விட்டு நடன இயக்குனராக அடி எடுத்து வைத்தார். காதல் தேசம் என்கிற படத்தில் இருந்து இவர் கோரியோகிராபராக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் சுறா, ஒஸ்தி, வணக்கம் சென்னை, வந்தா ராஜாவா தான் வருவேன், போடா போடி போன்ற பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக சிம்புவின் பல பாடல்களுக்கு இவர் தான் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த பின்னர் அவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ட்ரெய்லர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஹீரோவாக அவதாரம் எடுத்த ராபர்ட் மாஸ்டர்.! புதர் படத்தின் ட்ரைலர் வெளியானது.! வேற லெவல் ட்ரைலர். ! 1

விளம்பரம்

பிக்பாஸ் சீசன் 6ல் ஒரு முக்கியமான போட்டியாளராக இருந்து வந்தார் ராபர்ட் மாஸ்டர், முதல் இரண்டு வாரங்கள் நன்றாக விளையாடி வந்த நிலையில் மூன்றாவது வாரத்தில் இருந்து அவரது விளையாட்டு குறைய தொடங்கியது. தனது தந்தையின் நினைப்பு வந்து விட்டதால் தன்னால் சரியாக விளையாட முடியவில்லை என்று அவர் கூறியிருக்கிறார். பின்னர் இரண்டு வாரங்களுக்கு முன்பு நாமினேஷனில் மாட்டிக் கொண்ட அவர், வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியேறிய பின்பு அவர் நடித்துவரும் புதர் படத்தின் டிரைலரை வெளியிட்டு இருக்கிறார். இந்தப் படத்தை ஜாய்சோர் கிரியேஷன்ஸ் உடன் இணைந்து கெர்ப்ஜீரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்தப் படத்தில் ராபர்ட் மாஸ்டர் கதாநாயகனாக நடிக்க சரண்யா ஆனந்த், காதம்பரி, கெண்ட்ஸ் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

தொடர்புடையவை  படம் தரமா இருக்கு.! Blast uh.! 'கேப்டன் மில்லர்' படத்தை கொண்டாடும் மக்கள்.! வீடியோ உள்ளே.!

ஹீரோவாக அவதாரம் எடுத்த ராபர்ட் மாஸ்டர்.! புதர் படத்தின் ட்ரைலர் வெளியானது.! வேற லெவல் ட்ரைலர். ! 3
மனிதர்கள் போனால் திரும்பி வர முடியாத அளவிற்கு ஒரு தீவு இருக்கிறது. அந்த தீவு தான் இடும்பன் தீவு. அந்த தீவில் சிலர் மாட்டிக் கொண்டனர். அப்படி மாட்டிக் கொண்டவர்களை காப்பாற்றும் நாயகனாக ராபர்ட் மாஸ்டர் நடித்திருக்கிறார். அந்த தீவை சுற்றியே கதை நகருகிறது. தற்போது அந்த படத்தில் டிரைலர் வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ட்ரைலரை காண கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Track Musics

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment