ஏஆர் ரகுமான் கச்சேரியில் ராப் பாடல்களை பாடி பட்டையை கிளப்பிய பிக்பாஸ் ADK.! Rare வீடியோ.!

பிக்பாஸ்ஸில் கலந்து கொண்டுள்ள ராப் பாடகர் ஏடிக்கு ஏ.ஆர் ரகுமான் உடன் இணைந்து ஒரு கச்சேரியில் பாடியிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோ சுமார் 8 லட்சம் பார்வையாளர்களை தாண்டி இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 6ல் பல புது முகங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் குறிப்பிட தகுந்தவராக இருப்பவர் இலங்கையைச் சேர்ந்தவரான ஏடிகே. தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த இவர் இலங்கையில் செட்டில் ஆகிவிட்டார். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான ஆரியன் என்கிற ஆல்பம் மூலமாக பிரபலமானார். அதன் பின்னர் ஆரியன் தினேஷ் கனகரத்தினம் என்ற பெயரை ஏடிகே என்று மாற்றிக் கொண்டார். இவர் முதன்முதலாக ஆத்திச்சூடி பாடலை விஜய் ஆண்டனியுடன் இணைந்து பாடினார். அதுவே இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஏஆர் ரகுமான் கச்சேரியில் ராப் பாடல்களை பாடி பட்டையை கிளப்பிய பிக்பாஸ் ADK.! Rare வீடியோ.! 1

விளம்பரம்

பின்னர் அவர் அச்சம் என்ற படத்தில் சோக்காலி என்கிற பாடலையும், கடல் படத்தில் மகுடி மகுடி, ரஜினி முருகனில் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற பாடலை இமானுடன் சேர்ந்து பாடியிருக்கிறார். தற்போது இவர் யுவன் சங்கர் ராஜா, ஹரிஸ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன், ஏ ஆர் ரகுமான், டி இமான் ஆகிய பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பின்னணி பாடி வருகிறார். ஆல்பம் பாடல்கள் பலவற்றைப் பாடியும் ஹிட் கொடுத்திருக்கிறார். தற்போது இவர் பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டிருக்கிறார் இவர் மைனா நந்தினியின் சொந்த மாமா மகனும் ஆவார். ஏடிகேவிற்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். தற்போது இவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.

தொடர்புடையவை  தாமரை போல மிமிக்ரி செய்து அசத்திய சதீஷ்..விழுந்து விழுந்து சிரித்த தாமரை | BiggBoss Ultimate Promo

ஏஆர் ரகுமான் கச்சேரியில் ராப் பாடல்களை பாடி பட்டையை கிளப்பிய பிக்பாஸ் ADK.! Rare வீடியோ.! 3

விளம்பரம்

தற்போது ஏடிகேயின் இசைக் கச்சேரி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் ஏஆர் ரகுமானுடன் இணைந்து ராப் பாடல்களை பாடுகிறார். அந்த வீடியோ சுமார் 8 லட்சம் பார்வையாளர்களைப் பெற்று வருகிறது. நீங்களும் அவரின் அந்த வீடியோவை காண..! Watch the below video..!

விளம்பரம்

Youtube video code embed credits: ADK srirascol

விளம்பரம்

Leave a Comment