வைகைபுயலின் நாய் சேகர் படம் எப்படி இருக்கு.! வடிவேலு Come Back-ஆ பொது மக்கள் கருத்து.!

நீண்ட இடைவெளிக்கு பின்னர் வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் நாய் சேகர் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்த படம் குறித்த கருத்துக்களை தற்போது பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் காமெடியில் முடி சூடா மன்னனாக வலம் வருபவர் நடிகர் வடிவேலு, இவர் சில ஆண்டுகளாக எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்தார். தற்போது மீண்டும் திரைத்துறைக்கு திரும்பி இருக்கும் அவர், நாய் சேகர் ரிட்டன்ஸ், சந்திரமுகி 2 மாமன்னன் போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதில் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்த படம் குறித்து பொதுமக்கள் தங்களது விமர்சனங்களை முன் வைத்து இருக்கின்றனர். இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வைகைபுயலின் நாய் சேகர் படம் எப்படி இருக்கு.! வடிவேலு Come Back-ஆ பொது மக்கள் கருத்து.! 1

விளம்பரம்

இந்தப் படத்தில் வடிவேலுவுடன் இணைந்து குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி, ரெட்டிங் கிங்ஸ்லி,முனீஸ்காந்த், பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன், மனோபாலா, ஆனந்தராஜ் விஜய் டிவி பிரபலங்கள் ராமர், kpy பாலா ஆகிய பலர் நடித்திருக்கின்றனர். நாய்களை திருடி பிசினஸ் செய்யும் கதையாக இந்த படம் இருக்கும் என்று தெரிகிறது. காமெடி கலந்த ஜானருக்கு மீண்டும் வடிவேலு திரும்பி இருப்பது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகியிருந்தது. மூன்று பாடல்களுமே வெளியான சில நிமிடங்களில் மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருந்தது. அதேபோல ட்ரெய்லரும் மில்லியன் பார்வையாளர்களை கடந்திருந்தது. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் எகிறி இருந்தது.

தொடர்புடையவை  அனிருத் இசையில் "தேவாரா" படத்தின் மெலடியான Second Single வெளியாகியது..!

வைகைபுயலின் நாய் சேகர் படம் எப்படி இருக்கு.! வடிவேலு Come Back-ஆ பொது மக்கள் கருத்து.! 3

விளம்பரம்

இந்த நிலையில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பெரும்பாலான மக்கள் படம் வேற லெவெலில் இருப்பதாகவும், 4 ஆண்டுகளுக்கு பின்பு வடிவேலு வேற லெவல் கம் back கொடுத்து இருப்பதாகவும் கூறினர். அவர்களின் சொன்ன விமர்சனத்தின் முழு வீடியோவை நீங்களும் காண.! கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்.! Watch the video below.! 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: A To Z 360

விளம்பரம்

Leave a Comment