நடிகர் சரத்குமாருக்கு திடீர் உடல்நலக் குறைவு.! ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதி.!

நடிகர் சரத்குமார் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சரத்குமார். இவர் பல ஆண்டுகளாக அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். சில ஆண்டுகள் நடிப்பிலிருந்து விலகி இருந்த அவர், தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித்திருந்தார். தற்போது தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை முதலே சரத்குமார் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை பார்ப்பதற்காக அவரது மனைவி ராதிகா மற்றும் மகள் வரலட்சுமி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் சரத்குமாருக்கு திடீர் உடல்நலக் குறைவு.! ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதி.! 1

விளம்பரம்

வயிற்றுப்போக்கு காரணமாக நீர்ச்சத்து குறைபாடு இருப்பதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ராதிகாவும் வரலட்சுமி சரத்குமார் உடனிருந்து அவரை பார்த்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது் தற்போது பூரண நலத்துடன் இருப்பதாகவும் மேற்கொண்டு சில பரிசோதனைகளை எடுக்க வேண்டியதாகவும் சொல்லப்படுகிறது. முழுமையான மருத்துவ சிகிச்சை முடிந்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது சரத் குமார் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது. அதில் சரத்குமார் சிறு மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்.

தொடர்புடையவை  அம்மா அப்பாவுடன் நடிகை பூஜா ஹெக்டே..! முதல்முறையாக வெளியான குடும்ப புகைப்படம்..!

நடிகர் சரத்குமாருக்கு திடீர் உடல்நலக் குறைவு.! ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதி.! 3

விளம்பரம்

அவர் பூரண நலத்துடன் இருக்கிறார் இணையத்தில் வெளியாகும் எந்த ஒரு வதந்தியும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..! Watch the below video..!

விளம்பரம்

 

YouTube Video Code Embed Credits: Thanthi TV

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment