பாக்கியலட்சுமி தொடரில் காலனி தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை முடிந்து தற்போது ரிசல்ட் அறிவிக்கப்பட உள்ளது அந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது. பாக்கியலட்சுமி தொடர் நாளுக்கு நாள் விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த சீரியலில் வைதேகி நகர் காலனியில், காலனியின் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாக்கியா போட்டியிட முடிவெடுத்து இருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட ராதிகா முடிவெடுத்திருக்கிறார். மேலும் பாக்யாவை படிக்காதவர் என்ற ரீதியில் ராதிகா தாக்கி பேசுகிறார். அந்த ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி இருந்தது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

கோபிக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார் கோபி. தற்போது இனியா மற்றும் ராமமூர்த்தியும் கோபியுடனே வந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் வசிக்கும் வைதேகி நகர் பகுதி காலனியில் அடிக்கடி மின்விளக்குகள் எரிவதில்லை, நாய்கள் தொந்தரவு என்று தொடர்ந்து இருந்து வருகிறது. இதை தற்போது செயலாளராக இருப்பவரிடம் கேட்டால் அவர் பொறுப்பற்ற முறையில் பதில் அளிக்கிறார். இதனால் அந்த பொறுப்புக்கு மீண்டும் தேர்தல் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

அதில் பாக்யா போட்டியிட முடிவெடுத்து இருக்கிறார். இந்த நிலையில் தற்போது யாரும் எதிர்பாராத விதமாக பாக்யாவை எதிர்த்துப் போட்டியிட ராதிகாவை அழைத்து வருகிறார் கோபி. தற்போது காலனி தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை முடிந்து தற்போது ரிசல்ட் அறிவிக்கப்பட உள்ளது. அந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் யார் ஜெயிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண.! Watch the below Video.!
Youtube Video Code Embed Credits: Vijay Television