பிக்பாஸ்-ல் இருந்து வெளியேறிய பின்பு முதல் வீடியோவை வெளியிட்ட ராம்.! கேக் வெட்டி வரவேற்ற குடும்பத்தினர்.!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் ராம் ராமசாமி தன்னுடைய முதல் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவரை அவரது குடும்பத்தினர் கேக் வெட்டியும், மலர் தூவியும வரவேற்று இருக்கின்றனர். பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சி தொடங்கி 64 நாட்களை கடந்து விட்டது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 11 போட்டியாளர்களே தொடர்ந்து வருகின்றனர். இந்த வாரம் நடந்த இரட்டை வெளியேற்றத்தில் ஆயிஷா மற்றும் ராம் ராமசாமி இருவரும் வெளியேற்றப்பட்டனர். ராம் ராமசாமி ஒரு கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஆவார். இவருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ந்து போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. எனவே தனக்கு கிடைத்த பிக்பாஸ் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பிக் பாஸ் சீசன் சிக்ஸ் இல் ஒரு போட்டியாளராக உள்ளே நுழைந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ்-ல் இருந்து வெளியேறிய பின்பு முதல் வீடியோவை வெளியிட்ட ராம்.! கேக் வெட்டி வரவேற்ற குடும்பத்தினர்.! 1

விளம்பரம்

உள்ளே சென்ற அவர் ஆரம்பத்தில் இருந்தே அமைதியான போட்டியாளராகவே இருந்து வந்தார். குறிப்பாக அவரது கண்ணில் ஏற்பட்ட அலர்ஜி காரணமாக அவரது கண்கள் வீங்கிய நிலையிலேயே இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வெடுத்து வந்தார். இதனால் அவரை நிரூபித்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் தனது விளையாட்டை நன்றாக விளையாட தொடங்கினார் ராம ராமசாமி. குறிப்பாக கடந்த வாரம் நடைபெற்ற லிட்டில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற போட்டியில் போட்டியாளர்கள் திரை பிரபலங்கள் போல் வேடமிட்டு நடித்துக் காட்டினர். அதில் குறிப்பாக ராம் ராமசாமி ரகுவரன் போல வேடமிட்டு அவரைப் போலவே முயற்சி செய்து பேசிக் கொண்டிருந்தார். மிமிக்கிரி தெரியாத போதிலும் ஓரளவிற்கு ரகுவரன் போலவே குரலை மாற்றிப் பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்புடையவை  தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து விலகிட்டேன்.! ரொம்ப கஷ்டமா இருக்கு..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு .!

பிக்பாஸ்-ல் இருந்து வெளியேறிய பின்பு முதல் வீடியோவை வெளியிட்ட ராம்.! கேக் வெட்டி வரவேற்ற குடும்பத்தினர்.! 3

விளம்பரம்

ஆனால் கடைசி வாரத்தில் அவர் காட்டிய முனைப்பை முதல் வாரத்தில் இருந்தே காட்டினால் அவர் கண்டிப்பாக வெளியேறி இருக்க மாட்டார் என்பதே பலரின் கருத்தாக இருந்தது. யாரின் மனதையும் நோகடிக்காமல், யாருடனும் சண்டை போடாமல் தனது விளையாட்டை அழகாக விளையாடிய ராம் ராமசாமியை வெளியே அனுப்பியது குறித்து பலரும் அதிருப்தி தெரிவித்தனர். விளையாட்டே விளையாடாமல் பலர் உள்ளே இருக்கும் பொழுது ராமை வெளியே அனுப்பியது தவறு என்றும் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் வெளியேறிய பின்பு தனது முதல் வீடியோவை ராம் ராமசாமி வெளியிட்டிருக்கிறார். வீட்டிற்கு செல்லும் அவரிடம் குழந்தைகள் ஓடி வந்து ஏறி கொள்கின்றன. பின்னர் கேக் வெட்டி அவரை அவரது குடும்பத்தினர் வரவேற்கின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்.! Watch the below video.!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விளம்பரம்

Leave a Comment