திருச்சியில் உள்ள நெப்போலியனின் பூர்வீக வீட்டை பார்த்து இருக்கீங்களா? வைரலாகும் வீடியோ.!

நடிகர் நெப்போலியனின் அமெரிக்கா வீடு வைரல் ஆகிய நிலையில் தற்போது அவரின் சொந்த ஊரில் இருக்கும் பூர்வீக வீட்டின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழில் ஒரு காலத்தில் கிராமத்து கதைகளை எடுத்து நடிப்பதில் கைதேர்ந்தவராக இருந்தவர் நடிகர் நெப்போலியன். இவர் முதன்முதலாக 1991 ஆம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானார். பின்பு இவர் சீவலப்பேரி பாண்டி, கிழக்கு சீமையிலே போன்ற பல படங்களில் நடித்தார். மொத்தம் 70 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவரது மூத்த மகன் தனுஷ் மாற்றுத்திறனாளி என்பதால் அவரின் சிகிச்சைக்காக அடிக்கடி அமெரிக்கா சென்று வந்த இவர் ஒரு கட்டத்தில் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார். கடந்த 12 வட்டங்களாக அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இவர், ஆறு வருடங்களுக்கு முன்பு ஒரு பிரம்மாண்டமான வீட்டை வாங்கி இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் உள்ள நெப்போலியனின் பூர்வீக வீட்டை பார்த்து இருக்கீங்களா? வைரலாகும் வீடியோ.! 1
அந்த வீட்டில் தனது மகன் தன்னால் நடக்க முடியவில்லை என்று ஏங்கி விடக்கூடாது என்பதற்காக வீட்டை பார்த்து பார்த்து வடிவமைத்து இருக்கிறார். அதிநவீன வசதிகளுடன் கூடிய படுக்கைகள், நீச்சல் குளத்திற்கு செல்வதற்கு தனியாக லிப்ட், வீட்டு மாடிகளுக்கு செல்வதற்கு தனியாக ப்ரோக்ராம் செய்யப்பட்ட லிப்ட் வசதிகள் என்று வீட்டை பார்த்து பார்த்து கட்டி இருக்கிறார். 12,000 சதுர அடியில் அந்த வீடு கட்டப்பட்டிருக்கிறது. அந்த வீட்டிற்குள்ளேயே தியேட்டர், பார் செட்டப், பாஸ்கெட் பால் கோர்ட், நீச்சல் குளம் கார்கள் நிறுத்துவதற்கு என்று தனி இடம், தோட்டம் என மிகப் பிரம்மாண்டமாக அமைந்திருந்தது அந்த வீடு. அந்த வீட்டை சுற்றி வருவதற்கே ஒரு நாள் தேவைப்படும் என்று அளவிற்கு அரண்மனை போல் தனது வீட்டை கட்டி இருக்கிறார் நெப்போலியன்.

விளம்பரம்
தொடர்புடையவை  KGF விட விக்ரம் வேற லெவல்ல இருக்கும்..தியேட்டர் தெறிக்கும்..சாண்டி கொடுத்த பேட்டி | Sandy

திருச்சியில் உள்ள நெப்போலியனின் பூர்வீக வீட்டை பார்த்து இருக்கீங்களா? வைரலாகும் வீடியோ.! 3

இந்த நிலையில் தற்போது நெப்போலியன் சொந்த ஊரான திருச்சி மாவட்டத்தில் இருக்கும் பெருவளநல்லூர் கிராமத்தில் உள்ள அவரது பூர்வீக வீட்டின் வீடியோ வெளியாகி இருக்கிறது. ஒரு சிறிய ஓட்டு வீட்டில் இருந்து இன்று மிகப்பெரிய அண்மனை போன்ற வீட்டை கட்டி இருக்கிறார் நெப்போலியன். அந்த வீட்டின் வீடியோவை நீங்களும் காண.! Watch the below video.!

விளம்பரம்

 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Archives of Hindustan

விளம்பரம்

Leave a Comment