பிக்பாஸ் பிரபலத்துடன் திடீரென திருமணத்தை முடித்த சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் தேஜஸ்வினி

சின்னத்திரை நடிகை தேஜஸ்வினி கௌடாவுக்கு தற்போது பிக்பாஸ் பிரபலம் ஒருவருடன் திருமணம் முடிந்துள்ளது. அந்த வீடியோவை அவர் தனது யூட்யூப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். சின்னத்திரை நடிகை தேஜஸ்வினி கௌடா, விஜய் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் தமிழில்அறிமுகமானார். இந்த தொடரில் நடிகர் வினோத் பாபுவுக்கு ஜோடியாக நடித்தார். இவர் ஏற்கனவே தமிழ் தெலுங்கு கன்னடம் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். 2018 ஆம் ஆண்டு வீணா பொன்னப்பாவுடன் பில் ஹிந்தி என்கிற கன்னட சீரியல் மூலமாகத்தான் முதன் முதலில் தொலைக்காட்சி நடிகையாக அறிமுகமானார் தேஜஸ்வினி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் பிரபலத்துடன் திடீரென திருமணத்தை முடித்த சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் தேஜஸ்வினி 1

விளம்பரம்

பின்னர் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரி நானும் என்ற தொடரில் நடித்த பின்பு இவர் மிகவும் பிரபலமானார். இந்த சீரியல் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் விஜய் டிவியின் சீரியலில் இருந்து விலகி ஜீ தமிழுக்கு மாறினார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வித்யா நம்பர் ஒன் என்ற சீரியலில் நடித்து வருகிறார் தேஜஸ்வினி. பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்காத ஒரு பெண் எவ்வாறு தனது புத்திசாலித்தனத்தால் என்னென்ன செய்கிறார் என்பது குறித்த கதை தான் வித்யா நம்பர் ஒன்.

தொடர்புடையவை  கனவுகளுடன் சென்னைக்கு புறப்பட சந்தியா.! பிரேக் டவுன் ஆகி நிற்கும் பஸ்.! என்ன செய்ய போகிறார் சரவணன்

பிக்பாஸ் பிரபலத்துடன் திடீரென திருமணத்தை முடித்த சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் தேஜஸ்வினி 3

விளம்பரம்

கடந்த ஆகஸ்ட் மாதம் தேஜஸ்வினிக்கும் கன்னட பிக்பாஸில் கலந்து கொண்ட அமர்தீப் சௌத்திரிக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் இன்று அவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமண வீடியோவை தேஜஸ்வினி தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the below video.! 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Tejaswini Gowda

விளம்பரம்

Leave a Comment