பாரதிகண்ணம்மா சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்துவரும் நிலையில் தற்போது பிக்பாஸ் புகழ் தாமரைச்செல்வி பாரதி கண்ணம்மா சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். அந்த புகைப்படங்களை தாமரைச்செல்வியே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் நாளுக்கு நாள் விறுவிறுப்பும் திருப்பங்களும் நடந்து கொண்டே வருகிறது. தற்போது கண்ணம்மா தனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தனது தந்தையுடன் சொந்த ஊருக்கே திரும்பி இருக்கிறார். அங்கு டைலரிங் மற்றும் மாவு அரைத்துக் கொடுத்து வேலை பார்த்து தான் பிழைத்துக் கொள்வேன் என்று அவர் தைரியமாக நம்பிக்கையுடன் இருக்கிறார். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் பாரதி கண்ணம்மா மற்றும் குழந்தைகளை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தாமரைச்செல்வி இன்று பாரதி கண்ணம்மா சூட்டிங் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இன்று முதல் என்று பதிவிட்டு இருக்கிறார். தாமரைச்செல்வி பிரபல நாடக கலைஞர் ஆவார். கோயில் திருவிழாக்களில் தெருக்கூத்துகளில் மேடை நாடகங்களில் ஆடி வந்த அவர் தனக்கு எதுவும் சினிமா வாய்ப்பு கிடைத்து விடாதா என்று ஏங்கி தவித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இந்த நிகழ்ச்சியில் அவர் பட்டத்தை வெல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக அவர் வீட்டை விட்டு வெளியேறினார். இருந்த போதிலும் மனம் தளராத தாமரைச்செல்வி அடுத்தபடியாக பிக்பாஸ் அல்டிமேட் என்று ஓடிடி தளத்தில் வெளியான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் அங்கும் அவரால் வெற்றி பெற இயலவில்லை.

இருந்த போதிலும் அடுத்தடுத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். youtube சேனல் ஒன்றை தொடங்கி அதிலும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் அவருக்கு பாரதி கண்ணம்மா சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கண்ணம்மா தற்போது தனது சொந்த கிராமத்திற்கு திரும்பி உள்ளது போல் காட்சிகள் நடைபெற்று வருகிறது. அங்கு தாமரையும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. அந்த புகைப்படங்களை தாமரையே தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார். இதையடுத்து தாமரையின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Youtube Video Code Embed Credits: Vijay Television