உங்க விதவை மருமகளை எழில் தலையில கட்டி வைக்கலாம்னு பாக்குறீங்களா? திட்டி தீர்க்கும் ஈஸ்வரி.!

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ஈஸ்வரி பாட்டி அமிர்தா வீட்டிற்கு சென்று அமிர்தா இனிமேல் எழிலுடன் பேசக்கூடாது என்று கண்டிஷன் போட்டு விட்டு வருகிறார். மேலும் உங்கள் விதவை மருமகளை எங்கள் பேரன் எழிலின் தலையில் கட்டி வைக்கலாம் என்று முடிவெடுத்து விட்டீர்களா? என்று வார்த்தைகளை கொட்டுகிறார். பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் இரண்டாவது மகன் எழிலுக்கு ஜோடியாக நடித்து வருபவர் நடிகை ரித்திகா. இவர் அமிர்தா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் அமிர்தாவிற்கு திருமணம் ஆகி அவரது கணவர் சில வருடங்களிலேயே மரணம் அடைந்து விடுவார், இதனால் கைக்குழந்தை ஒன்றை வைத்துக்கொண்டு அமிர்தா தனது மாமனார் மற்றும் மாமியாருடன் வசித்து வருகிறார். ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உங்க விதவை மருமகளை எழில் தலையில கட்டி வைக்கலாம்னு பாக்குறீங்களா? திட்டி தீர்க்கும் ஈஸ்வரி.! 1

விளம்பரம்

அப்போது எதேச்சையாக எழில் மற்றும் அமிர்தாவிற்கே இடையே பழக்கம் ஏற்படுகிறது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறுகிறது. அமிர்தா தனக்கு திருமணமாகி கணவர் இறந்துவிட்ட செய்தியை எழிலிடம் சொல்லாமலே நாட்களை கடத்தி வந்தார். பின்னர் ஒரு நாள் அந்த உண்மை எழிலிற்கு தெரிய வந்த பின்பு அமிர்தா மீது இன்னும் காதல் அதிகமானது. அமிர்தராவை மனதார விரும்புவதாகவும் அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் அம்ருதாவின் மாமனார் மாமியார் இடமும் கூறி இருக்கிறார் எழில். இந்த நிலையில் எழில் வேலை பார்க்கும் நிறுவனத்தின் உரிமையாளர் மகளும் எழில் மீது காதல் கொள்கிறார். பணக்கார இடம் என்பதால் உரிமையாளரின் மகளிடம் பழகுவதையே எழிலின் பாட்டி ஈஸ்வரி விரும்புகிறார். எழில் அமிர்தாவுடன் பழகுவதை ஈஸ்வரி விரும்பவில்லை.

தொடர்புடையவை  "3 மாசம் கூட தாங்காதுனு சொன்னாங்க" முதல் திருமண நாளில் ஹேட்டர்ஸ்க்கு பதிலடி கொடுத்த ரவீந்தர்.!

உங்க விதவை மருமகளை எழில் தலையில கட்டி வைக்கலாம்னு பாக்குறீங்களா? திட்டி தீர்க்கும் ஈஸ்வரி.! 3

விளம்பரம்

இதனால் அமிர்தாவை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று எழிலிடம் சத்தியமும் வாங்குகிறார். வேறு வழியில்லாமல் எழிலும் சத்தியமும் செய்து கொடுத்துவிட்டார். இந்த நிலையில் இன்று அம்ரிதாவின் வீட்டிற்கு செல்லும் செழியன் மற்றும் ஈஸ்வரி பாட்டி வார்த்தைகளை கொட்டுகின்றனர். உங்கள் மருமகளை என் பேரன் தலையில் கட்டி வைத்து விடலாம் என்று நினைக்கிறீர்களா என்று ஈஸ்வரி பாட்டி கோபத்தில் வார்த்தைகளை விடுகிறார். இதனால் அமிர்தாவின் மாமியார் கண் கலங்கி அழுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண கீழே உள்ள வீடியோவை பாருங்கள்..! Watch the below video.!

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment