பட்டு புடவையில் தேவதை போல வந்த ரித்திகா.! முழு திருமண வீடியோவை வெளியிட்டார் ரித்திகா.!

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா தற்போது தனது திருமண வீடியோவை youtube பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். கேரளாவில் கோவிலில் வைத்து எளிமையாக நடந்த அந்த திருமணத்தின் வீடியோவை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர். தனது காதல் கணவர் தாலி கட்டும் அந்த முக்கியமான நிகழ்வுகளை தொகுப்பாக அவர் அந்த வீடியோவில் வெளியிட்டு இருக்கிறார். பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரித்திகா. இவர் இதற்கு முன்பாக ராஜா ராணி என்கிற சீரியலில் கதாநாயகனின் தங்கையாக நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். ஆனால் சில காரணங்களால் அவரால் அந்த நாடகத்தில் தொடர முடியவில்லை. திடீரென நாடகத்திலிருந்து விலகி இருந்தார். பின்னர் அவருக்கு பெரிய அளவில் எந்த நாடகம் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பட்டு புடவையில் தேவதை போல வந்த ரித்திகா.! முழு திருமண வீடியோவை வெளியிட்டார் ரித்திகா.! 1

விளம்பரம்

பட்டு புடவையில் தேவதை போல வந்த ரித்திகா.! முழு திருமண வீடியோவை வெளியிட்டார் ரித்திகா.! 3

பின்னர் அவர் பல லட்சம் மக்களால் பார்த்து ரசிக்கப்படும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்தார். ஆரம்பத்தில் இவரை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவரின் நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் பிடித்துப் போகவே, அந்த நிகழ்ச்சியின் முக்கியமான நபராகவே மாறிப் போய்விட்டார். அதன் பின்னர் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும் இவர், தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியலின் கதாநாயகி பாக்யாவின் இரண்டாவது மகன் எழிலுக்கு ஜோடியாக அமிர்தா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரித்திகா. இந்த நிலையில் அதே டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றி வரும் வினு என்பவர் உடன் அவருக்கு காதல் மலர்ந்தது.

விளம்பரம்
தொடர்புடையவை  Manimegalai-க்கு எதிராக மாறிய Sunitha..! Priyanka-க்கு தீவிர சப்போர்ட்..!

பட்டு புடவையில் தேவதை போல வந்த ரித்திகா.! முழு திருமண வீடியோவை வெளியிட்டார் ரித்திகா.! 5

பட்டு புடவையில் தேவதை போல வந்த ரித்திகா.! முழு திருமண வீடியோவை வெளியிட்டார் ரித்திகா.! 7

விளம்பரம்

கேரளாவில் ஒரு கோவிலில் வினுவுடன் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. திருமண வரவேற்பு சென்னையில் வைத்து நடைபெற்றது. இதில் குக் வித் கோமாளி புகழ், பாலா, ஷகீலா, பாக்கியலெட்சுமி சீரியல் நடிகர்கள் என விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். தற்போது ரித்திகாவும் அவரது கணவரும் மாலத்தீவிற்கு ஹனிமூனுக்கு சென்றுள்ளனர். அந்த திருமணத்தின் போது நடந்த முக்கியமான நிகழ்வுகளை வீடியோ தொகுப்பாக எடுத்து அதை தனது ஷோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் ரித்திகா. அந்த வீடியோ பல லட்சம் பார்வையாளர்களை தாண்டி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Rithika Tamilselvi

விளம்பரம்

Leave a Comment