அப்பா அம்மா பற்றி பேசும் போது கண்கலங்கிய ஹவுஸ்மேட்ஸ்.! எதிர்பார்க்காத எமோஷனல் ப்ரோமோ.!

பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி சுமார் 70 நாட்களை கடந்து விட்டது. இந்த சீசன் எப்போதும் போல் இல்லாத அளவிற்கு நாளுக்கு நாள் விறுவிறுப்பை கூட்டி வருகிறது. 21 நபர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டியில் 11 நபர்கள் வெளியேறி விட 10 போட்டியாளர்களுடன் நடைபெற்று வருகிறது. முன் எப்போதும் போல் இல்லாத அளவிற்கு இந்த சீசனை 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருவதால், மக்கள் நேரலையாக ஹவுஸ் மேட்ஸ் செய்யும் விஷயங்களை பார்த்து தெரிந்து கொள்ள முடிகிறது. இதனால் யார் தவறு செய்தார்கள்? யார் சரியாக பேசுகிறார்கள் என்பதை முன்கூட்டியே மக்கள் கணிக்க தொடங்கி இருக்கின்றனர். இந்த சீசன் ஆரம்பித்த நாள் முதலே சண்டை சச்சரவு என்று மிகவும் பரபரப்பாக இருந்து வருகிறது. பொதுமக்களில் இருந்து ஷிவின் மற்றும் தனலட்சுமி என்ற இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அப்பா அம்மா பற்றி பேசும் போது கண்கலங்கிய ஹவுஸ்மேட்ஸ்.! எதிர்பார்க்காத எமோஷனல் ப்ரோமோ.! 1

விளம்பரம்

பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரம் எலிமினேஷன் இருக்காது. இரண்டாவது வாரத்தில் இருந்து எலிமினேஷன் செய்ய தொடங்குவர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜி.பி.முத்து தானாக வெளியேறி விட்டார். தொடர்ந்து சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ராம், ஆயிஷா, ஜனனி என மொத்தம் 11போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் யாருமே எதிர்பாராத வண்ணம் ஜனனி எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். மணிகண்டன் குறைவான வாக்குகள் வாங்கிய போதிலும் trp-க்காக ஜனனியை வெளியே அனுப்பிவிட்டனர் என்று ஜனனி ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  லாட்ஜில் தவறுதலாக மாட்டிக்கொண்ட அபி மற்றும் வெற்றி.! அதிரடி திருப்பங்களுடன் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்

அப்பா அம்மா பற்றி பேசும் போது கண்கலங்கிய ஹவுஸ்மேட்ஸ்.! எதிர்பார்க்காத எமோஷனல் ப்ரோமோ.! 3

விளம்பரம்

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், இந்த வாரத்திற்க்கான வீக்லி டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. அதில் விக்ரமன், அசீம், அமுதவாணன் மூன்று பேரும் ஆசிரியராக மாறி இருக்கின்றனர். மற்ற ஹவுஸ்மேட்ஸ் குழந்தைகளாக மாறி இருக்கின்றனர். குழந்தைகளாக இருக்கும் போட்டியாளர்கள் ஆசிரியர்களை படுத்தி எடுத்து வருகின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! Watch the below video..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment