படத்துல சுத்தமா லாஜிக் இல்ல.! ஒரே சண்டையை 1 மணி நேரமா போட்டுட்டு இருக்கானுங்க.!

நடிகர் விஷால் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் லத்தி. இந்தப் படத்தை ராணா புரொடக்ஷன் தயாரித்திருக்க இயக்குனர் ஏ.வினோத்குமார் இயக்கியிருந்தார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மேலும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்திருந்தார். இந்தப் படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களே பெற்றிருந்தது. படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் இந்த படத்தில் லாஜிக் ஓட்டைகள் நிறைய இருப்பதாகவும் முதல் பாதி மிகப் பொறுமையாக சென்றது. இரண்டாவது பாதி முழுவதும் முழுவதும் சண்டையாக இருந்தது என்று தங்களது ஆதங்கத்தை தெரிவித்து இருந்தனர். தற்போது ப்ளூ சட்டை மாறனும் அது போல் கலவையான விமர்சனத்தையே கொடுத்திருக்கிறார்.  வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படத்துல சுத்தமா லாஜிக் இல்ல.! ஒரே சண்டையை 1 மணி நேரமா போட்டுட்டு இருக்கானுங்க.! 1

விளம்பரம்

லத்தி ஸ்பெஷலிஸ்ட் ஆக முருகானந்தம் என்கிற கதாபாத்திரத்தில் விஷால் நடித்திருக்கிறார். விஷாலின் உயர் அதிகாரியாக இருக்கும் ஒருவரின் மகளை தாதாவின் மகன் ஒருவன் வம்பிழுத்து விடுகிறான். அதனால் அந்த உயர் அதிகாரி அந்த தாதாவின் மகனை யாருக்கும் தெரியாமல் கடத்தி ஒரு இடத்தில் வைத்து விஷாலை அழைத்து வந்து அவனை அடிக்க சொல்கிறார். அப்போது அந்த தாதா மகனின் முகத்தை பிளாஸ்டிக் கவரைக் கொண்டு மூடியிருக்கிறார். அதில் சில ஓட்டைகள் இருந்த காரணத்தினால் விஷாலை அடி வாங்கியவர் பார்த்து விடுகிறார். பின்னர் தனது தந்தை தாதாவிடம் செல்லும் அவர் விஷாலின் அங்க அடையாளங்களை சொல்லி அவரின் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்று துடிக்கிறார். பின்னர் அந்த தாதாவிடம் இருந்து எப்படி விஷால் தனது குடும்பத்தை காப்பாற்றினார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

தொடர்புடையவை  கண்ணாலேயே கொல்லுராங்களே நம்ம தலைவி.! ஸ்பெயினில் நயனின் அழகிய புகைப்படங்கள்

படத்துல சுத்தமா லாஜிக் இல்ல.! ஒரே சண்டையை 1 மணி நேரமா போட்டுட்டு இருக்கானுங்க.! 3
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ப்ளூ சட்டை மாறன் லாஜிக் ஒரு துளி கூட இந்த படத்தில் இல்லை. பிளாஸ்டிக் கவரில் ஓட்டை இருந்ததால் அந்த பிளாஸ்டிக் கவர் வழியாகத்தான் விஷாலை வில்லன் பார்த்திருப்பார். எனவே அதே கவரை மாட்டிக் கொண்டு சுற்றினால் தான் விஷாலை தன்னால் சரியாக கண்டுபிடிக்க முடியும் என்கிற லூசுத்தனமான ஐடியாக்களுடன் வில்லன் சுற்றிக் கொண்டிருக்கிறார். கிளைமாக்ஸில் ஒரே சண்டையை 45 மணி நிமிடங்களாக போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிட்டிக்கு நடுவில் கட்டப்பட்டு கொண்டிருக்கும் பில்டிங்கில் அசால்ட்டாக ஆயிரம் பேரை அடித்துக் கொண்டிருக்கிறார் ஹீரோ. ஆனால் அதை தட்டிக் கேட்க யாருமே வரவில்லை. படத்தில் சுத்தமாக லாஜிக்கே இல்லை என்று காட்டமான விமர்சனங்களை முன் வைத்தார். அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the below video..!

விளம்பரம்

 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Tamil Talkies

விளம்பரம்

Leave a Comment