ரவுடி பேபியாக மாறிய த்ரிஷா.! ஆக்ஷனில் மிரட்டி எடுத்துள்ள “ராங்கி” படத்தின் ட்ரைலர் இதோ.!

திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ராங்கி படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ஆக்ஷன் அதிரடியில் பின்னி எடுத்து இருக்கிறார் திரிஷா. தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை திரிஷா. இவர் குடும்பப் பாங்கான படங்கள் தொடங்கி, பல வெற்றி படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார் நடிகை திரிஷா. சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் மிக பெரிய வரவேற்பை பெற்று இருந்தது. குறிப்பாக த்ரிஷா கதாபாத்திரத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

ரவுடி பேபியாக மாறிய த்ரிஷா.! ஆக்ஷனில் மிரட்டி எடுத்துள்ள "ராங்கி" படத்தின் ட்ரைலர் இதோ.! 1

விளம்பரம்

1999ஆம் நடிகை சிம்ரனின் தோழியாக முதல் முறை சினிமாவில் தோன்றினார் நடிகை திரிஷா. சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி பின் நாயகியாக வளர்ந்து 40 வயதை நெருங்கியும் இன்றளவும் ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கிறார். 23 ஆண்டு சினிமா வாழக்கையில் இவர் அடைந்திராத உச்சமும் இல்லை, கடந்திராத தோல்விகளும் இல்லை. தென்னிந்தியா சினிமாவின் ராணி என அழைக்கப்படுகிறார் திரிஷா. இந்த நிலையில் தற்போது பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கு அனைத்து நடிகைகளும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் த்ரிஷாவும் ராங்கி என்ற படத்தில் நடித்துள்ளார்.

தொடர்புடையவை  செம்ம மெலடியான Sasikumar நடிக்கும் Nandhan படத்தின் யெக்கி யெக்கி First Single வெளியாகியது..!

ரவுடி பேபியாக மாறிய த்ரிஷா.! ஆக்ஷனில் மிரட்டி எடுத்துள்ள "ராங்கி" படத்தின் ட்ரைலர் இதோ.! 3

விளம்பரம்

இந்த படத்தை சரவணன் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்திற்கு கதை எழுதி இருக்கிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. சி.சத்யா படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். தற்போது படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் ரவுடி பேபியாக மாறி மாஸ் காட்டியிருக்கிறார் த்ரிஷா. அந்த ட்ரைலரை நீங்களும் காண..! Watch the below video..!

விளம்பரம்

 

YouTube Video Code Embed Credits: Sun Tv

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment