நயன்தாராவுடன் படம் பார்க்க சென்ற தன்னை அவமானப்படுத்தி விட்டதாக ஜிபி முத்து குற்றச்சாட்டு.!

நயன்தாரா திரைப்படமான கனெக்ட் படத்தின் ஸ்பெஷல் ஷோவுக்குச் சென்ற தன்னை அவமதித்து விட்டதாக ஜிபி முத்து தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். மேலும் தன்னை அவமானப்படுத்தி துரத்தி விட்டதாகவும் அவர் வருத்தத்துடன் பேசினார் பிரபல யூட்யூபரான ஜி பி முத்து டிக் டாக் செயலி மூலமாக பிரபலமானவர். பின்னர் இவர் தற்போது youtube சேனல் ஒன்றை தொடங்கி அதில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவருக்கு ரசிகர்கள் தொடர்ந்து கடிதங்கள் அனுப்பி வருகின்றனர். அந்த கடிதங்களை படித்ததன் மூலமாக குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமானார். கடிதங்களை படிக்கும் போது அசிங்கமாக பேசுபவர்களை இவரும் அதே பாணியில் திட்டி வீடியோ வெளியிட்டதால் பலர் இவரது வீடியோக்களை ரசிக்க தொடங்கினர். அதன் மூலமாக பிரபலமான ஜி பி முத்து தற்போது நயன்தாரா தரப்பு தன்னை அவமானப்படுத்தி விட்டதாக பகிரங்க குற்றம் சாட்டியிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நயன்தாராவுடன் படம் பார்க்க சென்ற தன்னை அவமானப்படுத்தி விட்டதாக ஜிபி முத்து குற்றச்சாட்டு.! 1

விளம்பரம்

நயன்தாரா நடிப்பில் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்த படம் தான் கனெக்ட். பேய் கதையை மையமாக வைத்து நயன்தாராஇந்த படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் பிரீமியர் ஷோ டிசம்பர் 20ஆம் தேதி சென்னையில் நடந்தது. இதையடுத்து பல பிரபலங்கள் இந்த ஷோவை பார்ப்பதற்காக திரையரங்கிற்கு வருகை தந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக ஜிபி முத்துவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தான் நயன்தாரா தரப்பு மிகவும் அவமானப்படுத்தப்பட்டதாக ஜிபி முத்து தற்போது பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். விஐபி வரிசையில் நயன்தாராவுடன் அமர்வதற்கு அவருக்கு இருக்கை ஒதுக்கப்படும் என்று படக்குழு தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். ஆனால் விஐபி வரிசைக்கு தான் செல்ல முயன்ற போது அங்கு அனுமதிக்க மறுத்து பவுன்சர்கள் தன்னை துரத்தி விட்டதாக கூறினார். இதனால் தான் மிக அவமானமாக உணர்ந்ததாக கூறினார்.

தொடர்புடையவை  ஒரு காதல் தோல்வியை கூட ஹிட் பாட்டா மாத்த முடியும்னா இது யுவனால மட்டும தான் முடியும்.

நயன்தாராவுடன் படம் பார்க்க சென்ற தன்னை அவமானப்படுத்தி விட்டதாக ஜிபி முத்து குற்றச்சாட்டு.! 3

விளம்பரம்

ஜி பி முத்துவின் இந்த பேட்டியை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கூப்பிட்டு எதற்காக அசிங்கப்படுத்த வேண்டும் என்று நயன்தாரா தரப்பை ஜிபி முத்துவின் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் கணக்கில் இருக்கும் வீடியோவை பார்க்கவும்..!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment