இயக்குனர் வம்சி இயக்கியிருக்கும் வாரிசு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தற்போது சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நடிகர் ரசிகர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை அவரது ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது வரை சுமார் 65 படங்களுக்கு மேல் நடித்து முடித்து இருக்கிறார். இந்த நிலையில் அவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை தில் ராஜு தயாரித்திருக்கிறார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் அஜித் மோதும் படமாக அமைந்துள்ளது. அஜித்தின் துணிவு படத்துடன் பொங்கலுக்கு இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார்.
#EnNenjilKudiyirukkum pic.twitter.com/4rbooR4XLa
— Vijay (@actorvijay) December 24, 2022
இதில் பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், குஷ்பூ, யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். வாரிசு திரைப்படம் எமோஷனல் நிறைந்த ஒரு குடும்ப படம் என்று கூறப்படுகிறது. இதுவரை வாரிசு படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். விஜய் படத்திற்கு தமன் முதல் முறையாக இசையமைக்கும் படம் இதுவாகும்.

இந்த படத்தின் மூன்று பாடல்களுமே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. சுமார் 60 மில்லியன்களுக்கு மேல் பார்வையாளர்களை பெற்று ரஞ்சிதமே பாடல் சாதனை புரிந்துள்ளது. அடுத்தபடியாக வெளியான தீ தளபதி பாடலும், மூன்றாவதாக வெளியான சோல் ஆஃப் வாரிசு என்கிற பாடலும் மக்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிகழ்ச்சி முடிந்து ரசிகர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை அவரது ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.