வீட்டை விட்டு வெளியேறினார் தனலட்சுமி.! நீங்க வெளியே போனது ஏத்துக்கவே முடில தனா. !

பிக்பாஸில் இருந்து இந்த வாரம் தனலட்சுமி வெளியேறி இருக்கிறார். தனலட்சுமியை வெளியேற்றியது தவறான முடிவு என்று பிக்பாஸ் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி 75 நாட்கள் நிறைவடைந்து விட்டது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது வரை 11 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். தற்போது பத்து போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வார எலிமினேஷனில் தனலட்சுமி வெளியேறி இருக்கிறார். கடந்த வாரம் ஜனனி வெளியேறிய போது மக்கள் எப்படி எதிர்ப்பு தெரிவித்தார்களோ அதே போல தற்போது தனலட்சுமி வெளியேற்றத்திற்கும் மக்கள் இணையதளத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வீட்டை விட்டு வெளியேறினார் தனலட்சுமி.! நீங்க வெளியே போனது ஏத்துக்கவே முடில தனா. ! 1

விளம்பரம்

 

நேர்மையற்ற முறையில் இந்த எலிமினேஷன் நடைபெற்று இருப்பதாக அவர்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். கதிர் மைனா ரட்சிதா போன்றவர்கள் வீட்டில் மிக்சர் சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள் என்றும் ஆனால் நன்றாக விளையாடி வரும் தனலட்சுமியை வெளியேற்றி இருப்பது சரியில்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மைனா ரட்சிதா போன்றவர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் வெளியில் இருப்பதால் இருப்பதாலும், அவர்கள் விஜய் டிவியில் இருந்து வந்தவர்கள் என்பதாலும் அவர்களை தக்க வைக்க தான் பிக்பாஸ் திட்டமிடுகிறது என்று பிக்பாஸ் மீது இணைய நெட்டிசன்களும், பிக்பாஸ் ரசிகர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  நீங்க ஜனனி பத்தி அப்படி சொல்லவே இல்லையா? அசீமை அடிக்க செல்வது போல ஆவேசமாக சென்ற தனம்

வீட்டை விட்டு வெளியேறினார் தனலட்சுமி.! நீங்க வெளியே போனது ஏத்துக்கவே முடில தனா. ! 3

தனலட்சுமி வெளியேறும் பட்சத்தில் Freez டாஸ்க்கில் தனது தாயை இந்த பிக்பாஸிற்குள் அழைத்து வந்து பெருமைப்படுத்த வேண்டும் என்ற தனலட்சுமியின் ஆசை நிறைவேறாமலேயே வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பம் முதலே ஸ்டராங் பிளேயராக இருந்து வந்த தனலட்சுமி பொம்மை டாஸ்க், பேக்டரி டாஸ்க், ஏலியன் டாஸ்க் என அனைத்திலும் சிறப்பாக ஆடி வந்தார். இந்த நிலையில் அவர் வீட்டை விட்டு வெளியேறி இருப்பது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment