திருமணமான இரண்டே மாதத்தில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பூர்ணா.! வெளியான புகைப்படங்கள்

திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன நிலையில் தற்போது கற்பகமாக இருப்பதாக நடிகை பூர்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. சமீபத்தில் முஸ்லீம் தொழிலதிபர் ஒருவரை துபாயில் வைத்து திருமணம் செய்து கொண்டார் பூர்ணா. கேரளாவில் பிறந்து வளரந்த சம்னா காசிம், பூர்ணா என்ற அடையாளத்துடன் படங்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் முண்ணனி நடிகையாக வலம் வருகிறார். இவர் முதன் முதலாக இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் “முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு” படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் பூர்ணாவிற்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழை விட தெலுங்கில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கியது.

திருமணமான இரண்டே மாதத்தில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பூர்ணா.! வெளியான புகைப்படங்கள் 1

விளம்பரம்

 

முனியாண்டி விலங்கியல் படத்தை தொடர்த்து கொடைக்கானல், பகடை, துரோகி, ஆடு புலி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு, சகலகலா வல்லவன், மணல் கயிறு 2, கொடிவீரன், சவரகத்தி, எவனுக்கு எங்கேயோ, மச்சம் இருக்கு, அடங்கா மறு, காப்பான், லாக் அப் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். 2021ல் வெளிவந்த தலைவி படத்தில் இவர் வி.கே.சசிகலாவாக நடித்துள்ளார். தொடர்ந்து பேய் படங்களில் பேயாக நடித்து இருந்ததால் “தி இந்து” பத்திரிக்கை அவரை “தெலுங்கு படங்களின் பேய் ராணி” என்று முத்திரை குத்தியது. அவனு (2012) மற்றும் அதன் தொடர்ச்சியான அவுனு 2 (2015) ஆகிய படங்களில் அவர் பாராட்டுகளைப் பெற்றார்.

விளம்பரம்
தொடர்புடையவை  ஏன்டா இப்படி கீழ்தரமா பண்றீங்க? நடிகர் சங்கம் மீது கடும் கோபத்தில் சாந்தனு?

திருமணமான இரண்டே மாதத்தில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பூர்ணா.! வெளியான புகைப்படங்கள் 3

 

விளம்பரம்

தற்போது பூர்ணா ஆறு படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். தமிழில் பிசாசு 2, அம்மாயி, பேசும் படம் போன்ற மூன்று படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சாணித் ஆசிப் அலி என்கிற தொழிலதிபரை அவர் மணந்து கொண்டுள்ளதாக அறிவித்து இருந்தார். திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன நிலையில் தற்போது கற்பகமாக இருப்பதாக நடிகை பூர்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. இந்த வருடம் எனக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்தது அல்லாஹ் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளான்.! உங்கள் பிரார்த்தனைகளுக்கும் ஆசீர்வாதங்களுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

திருமணமான இரண்டே மாதத்தில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பூர்ணா.! வெளியான புகைப்படங்கள் 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment