பிக்பாஸ் வீட்டில் இருந்து தனலட்சுமி வெளியேறி இருந்தார். அவர் தற்போது மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரியாக வீட்டிற்குள் வர இருப்பதாக தெரிகிறது. பிக்பாஸ் முடிய என்றும் மூன்று வாரங்கள் இருப்பதால், தனலட்சுமியை இந்த வாரமே உள்ளே கொண்டுவர பிக்பாஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி 84 நாட்களில் நிறைவடைந்து விட்டது.. 21 போட்டியாளர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது ஒன்பது போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இதில் இன்று மணிகண்டன் வெளியேற்றப்பட்டு எட்டு போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடர இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் மூன்று வாரங்கள் மீதம் இருக்கும் நிலையில் கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்ட தனலட்சுமியை மீண்டும் உள்ளே கொண்டு வருவதற்கான திட்டங்கள் இருப்பதாக தெரிகிறது. அந்த தகவல் இரண்டு நாட்களாக பரவி வந்த நிலையில் தற்போது அது உறுதியாகி உள்ளதாகவே தெரிகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர்கள் தங்களது இன்ஸ்டாகிராமில் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும், ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து பதிவிடுவது வழக்கம். பின்னர் விஜய் டிவியே ஒரு லைவ் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அந்த நிகழ்ச்சிக்கு அவர்களை வரவழைத்து சில கேள்விகளை கேட்பதையும் வழக்கமாக கொண்டுள்ளது. ஆனால் தனலட்சுமி வெளியேறிய சில நாட்களாகவே அவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லை. மேலும் அவருடைய instagram பக்கத்திலும் எந்த விதமான பதிவுகளும் போடப்படவில்லை. தனலட்சுமி எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறிய போது அவர் காரில் ஏறி சென்றது போல் காட்டப்பட்டது. ஆனால் தனலட்சுமி வெளியேற்றம் நியாயமற்ற முறையில் இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்ததால் மீண்டும் அவரை வீட்டில் வைல்டு கார்டு என்ட்ரியாக அனுமதிக்க பிக்பாஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.
தனலட்சுமிக்கு எந்த விதமான சினிமா பின்புலமும் கிடையாது. அவர் பொதுமக்களில் இருந்து ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். 80 நாட்களாக தனி ஒரு ஆளாக நின்று போராடி மக்கள் பலரின் மனங்களையும் அவர் வென்றிருந்தார். அவரின் வெளியேற்றம் குறித்து பலரும் கருத்து தெரிவித்தனர். வீட்டில் இருந்தபோது அவருடைய கோபம் மட்டுமே அவருக்கு நெகட்டிவாக இருந்தது. மற்றபடி அவர் ஒரு சிறந்த போட்டியாளர். எல்லா போட்டியிலும் அவர் தனது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். எனவே அவரின் வெளியேற்றம் கொஞ்சம் கூட நியாயம் இல்லை என்று கருத்து தெரிவித்தனர். இதனால் தற்போது மீண்டும் தனலட்சுமியை வீட்டின் உள்ளே அனுப்ப பிக்பாஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே சீசன் 3யின் போது வனிதாவையும், சீசன் 5ல் அபிஷேக் ராஜாவையும் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. அது போல் தற்போது தனலட்சுமியும் உள்ளே செல்வார் என்று தெரிகிறது.