நடிகர் ஸ்ரீகாந்தின் குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா? முதல் முறையாக வெளியான புகைப்படம்.!

நடிகர் ஸ்ரீகாந்த் தற்போது முதன்முறையாக தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ஸ்ரீகாந்த் ஒரு தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களின் நடித்து வரும் தென்னிந்திய நடிகர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு “ரோஜா கூட்டம்” என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் அவர் ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, கனா கண்டேன், மெர்குரி பூக்கள், கிழக்கு கடற்கரை சாலை, நண்பன் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்று சொன்னால் அது பார்த்திபன் கனவு தான். இந்த படத்தில் சினேகாவுக்கு ஜோடியாக இவர் நடித்திருப்பார். இவரை தெலுங்கில் ஸ்ரீராம் என்று அழைப்பது வழக்கமாக இருக்கிறது. ஸ்ரீகாந்தியின் தந்தை சித்தூரை சேர்ந்தவர். எனவே இவர் தந்தை வழியில் தெலுங்கும், தாய் வழியில் தமிழும் ஆவார்.

நடிகர் ஸ்ரீகாந்தின் குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா? முதல் முறையாக வெளியான புகைப்படம்.! 1

விளம்பரம்

நடிகர் ஸ்ரீகாந்தின் குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா? முதல் முறையாக வெளியான புகைப்படம்.! 3

நடிகர் ஸ்ரீகாந்தின் குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா? முதல் முறையாக வெளியான புகைப்படம்.! 5
ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த இவர் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் சென்னைக்கே குடி பெயர்ந்தார். இவருக்கு ஒரு மூத்த அண்ணனும் உண்டு. அவர் டெங்குவால் காலமாகிவிட்டார். பின்னர் ஸ்ரீகாந்த் வந்தனா என்பவரை 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஆஹில் மற்றும் ஆஹனா என்கிற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் கதாநாயகனாக நடித்து வந்த ஸ்ரீகாந்த் 2002 ஆம் ஆண்டு தொடங்கி 2009 ஆம் ஆண்டு வரை பல படங்களில் நடித்து வந்தார். பின்னர் அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைந்ததால், தற்போது அவர் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்து வருகிறார். நண்பன் படத்தில் அவர் விஜய்க்கு நண்பனாக நடித்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் காபி வித் காதல். இந்த படத்தில் ஜெய் மற்றும் ஜீவாவிற்கு அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

விளம்பரம்
தொடர்புடையவை  ஆசிரியர் நடிகர் விஜய்க்கு எழுதிய கடிதம்!

நடிகர் ஸ்ரீகாந்தின் குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா? முதல் முறையாக வெளியான புகைப்படம்.! 7

நடிகர் ஸ்ரீகாந்தின் குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா? முதல் முறையாக வெளியான புகைப்படம்.! 9

விளம்பரம்

நடிகர் ஸ்ரீகாந்தின் குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா? முதல் முறையாக வெளியான புகைப்படம்.! 11

இவர் தற்போது ரமணாசுரா என்கிற தெலுங்கு படத்திலும், எக்கோ என்கிற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் 1990களில் ஜன்னல் என்கிற ஒரு சின்னத்திரை நாடகத்திலும் நடித்திருக்கிறார். தற்போது ஒரு தெலுங்கு நாடகத்திலும் அவர் நடித்து வருகிறார். ஸ்ரீகாந்த் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வளவாக வெளியில் பகிர்ந்ததில்லை. முதன்முறையாக தனது மகன் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படங்களை அவர் வெளியில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.! அந்தப் புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது. ஸ்ரீகாந்தின் மூத்த மகன் ஆஹில் 13 வயதை தொட்டிருக்கிறார். ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகள் இருக்கிறார்களா என நெட்டிசன்கள் கமெண்ட்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment