நிவின் பாலி தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பிரேமம் படத்தில் வந்த நிவின் பாலை போல் மாறி இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நிவின் பாலி. இவர் கேரள மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர். பொறியியல் பட்டதாரியான இவர் 2006ஆம் ஆண்டு இரண்டு ஆண்டுகள் பெங்களூருவில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்தார். பின்னர் அவரது தந்தை இறந்து விட அந்த வேலையை உதறிவிட்டு சொந்த ஊருக்கே திரும்பினார். பின்னர் அங்கு தனது தாயுடன் வசித்து வந்த அவர் சிறு சிறு வேலைகள் செய்து கொண்டு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை தேடிக் கொண்டிருந்தார். நடுத்தர குடும்பத்தில் பிறந்த அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு எளிதில் கிடைத்துவிடவில்லை. 2010 ஆம் ஆண்டு மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்பின் நேர்முகத் தேர்விற்காக சென்றார் நிவின் பாலி.

இதில் இறுதியாக 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் அதிலும் அவரால் இடம் பிடிக்க முடியவில்லை. பின்னர் மனம் தளராமல் தன்னை மெருகேற்றிக் கொண்டு மீண்டும் நேர்முகத் தேர்வுக்கு சென்றார் நிவின். பின்னர் முதல் படமாக மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் என்கிற படத்திலேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்திற்குள் அறிமுகமான அதே வருடமே தனது கல்லூரி காலத் தோழியான ரின்னா சாயினை மணந்து கொண்டார். பின்னர் அவர் டிராபிக், தி மெட்ரோ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு படங்கள் என்று சொன்னால் பெங்களூர் டேஸ், வடக்கான் செல்ஃபி, பிரேமம் போன்ற படங்கள்தான். தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வந்த அவருக்கு 2013 ஆம் ஆண்டு தமிழில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் என்கிற படத்தில் நஸ்ரியா உடன் இணைந்து அவர் தமிழில் அறிமுகமானார் அதன் பின்னர் அவர் எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை. மலையாள படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் நிவின் நிவின் பாலியின் சமீபத்திய புகைப்படங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் அவர் சாக்லேட் பாயாக இருந்த அவர் திடீரென உடல் எடை கூடி மிகவும் குண்டாக காட்சியளித்தார். இதை பகிர்ந்த நெட்டிசன்கள் இது நிவின் பாலியா என்று கேட்கும் அளவிற்கு அவரது உருவ தோற்றம் முற்றிலுமாக மாறி இருந்தது. இந்த நிலையில் இன்று காலை முதலே ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் நிவின் பாலி உடல் எடையை வெகுவாக குறைத்து பிரேமம் படத்தில் வந்தது போல மீண்டும் பழைய மாதிரி உடல் எடையை வெகுவாக குறைத்து இருக்கிறார். இந்த புகைப்படத்தை பகிர்ந்த பலரும் நிவின்பாலியின் கடின உழைப்பை பாராட்டி வருகின்றனர்.

உடல் எடையை கூடியிருந்ததால் பலரும் நிவின் பாலியை கிண்டல் செய்து வந்தனர். தற்போது அனைவருக்கும் பதிலடி கொடுப்பது போல் 25 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஆள் செம்ம ஸ்மார்ட்டாக மாறி இருக்கிறார்.