எனக்கு அதனால தான் விக்ரமனை பிடிக்காம போச்சு.! உண்மையான காரணத்தை சொன்ன மணிகண்டன்.!

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் மணிகண்டன் முதல் முறையாக லைவ் வீடியோவிற்கு வந்திருக்கிறார். அவர் பிக்பாஸ் பற்றியும் வீட்டில் உள்ள ஹவுஸ் மேட்ஸ் பற்றியும் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி 85 நாட்களை கடந்து விட்டது. 21 போட்டியாளருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர். மொத்தம் 13 பேர் வெளியேறி விட கடைசி வாரத்தில் 13வதாக மணிகண்டன் ராஜேஷ் வீட்டிலிருந்து வெளியேறினார். மணிகண்டன் ராஜேஷ் பிரபல திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சொந்த அண்ணன் ஆவார். பிக்பாஸில் இருந்த போது நான்கு முறை கேப்டனாக பதவியேற்று பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இதுவரை தமிழ் சீசன்ககளில் இதுபோல் யாரும் நான்கு முறை கேப்டனாக இருந்ததில்லை. அதனால் வலிமையான போட்டியாளர்களில் ஒருவராக கருதப்பட்டார் மணிகண்டன். இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக கடந்த வாரம் வீட்டில் இருந்து வெளியே அனுப்பப்பட்டார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

எனக்கு அதனால தான் விக்ரமனை பிடிக்காம போச்சு.! உண்மையான காரணத்தை சொன்ன மணிகண்டன்.! 1

விளம்பரம்

மணிகண்டன் ராஜேஷ் ஏற்கனவே சன் தொலைக்காட்சி, கலர்ஸ் தமிழ், விஜய் தொலைக்காட்சி என பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்திருக்கிறார். மேலும் அவர் தனது தங்கையுடன் இணைந்து டிரைவர் ஜமுனா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியிலும் தனது மனைவியை சோபியாவுடன் பங்கெடுத்திருக்கிறார். இந்த நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய அவரை ஐஸ்வர்யா மற்றும் மனைவி சோபியா ஆகியோர் இணைந்து வெடி வெடித்து அவரை வரவேற்று இருந்தனர். தற்போது முதல் முறையாக லைவ் வீடியோவில் பேசிய மணிகண்டன் வீட்டில் உள்ள ஹவுஸ்மேஸ் குறித்து பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார். மேலும் தான் டிக்கெட் டு பினாலே டாஸ்க் வரை இருக்க விரும்பியதாகவும் ஆனால் தன்னை எதிர்பாராமல் வெளியே அனுப்பி விட்டதால் தனக்கு மிகவும் ஏக்கமாக இருப்பதாகவும் பேசினார்.

தொடர்புடையவை  கங்காவுக்காக காவேரி செய்த பெரிய தியாகம்.! சகோதரிகள் மீண்டும் இணைவர்களா.? 'மகாநதி' ப்ரோமோ..!

எனக்கு அதனால தான் விக்ரமனை பிடிக்காம போச்சு.! உண்மையான காரணத்தை சொன்ன மணிகண்டன்.! 3
மேலும் பிக்பாஸ் வீட்டில் கதிரவன், மைனா, அசீம், குயின்சி ஆகியோரை தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக பேசினார் பின்னர் விக்ரமனுக்கும் தனக்கும் ஆரம்பத்திலிருந்து ஆகவில்லை. அந்த பொம்மை டாஸ்க்கில் ஏற்பட்ட சிறு மனகசப்பு கடைசி வரை நீடித்தது. ஆனால் நான் தொலைவில் இருந்து விக்கிரமனை பார்த்திருக்கிறேன். அவர் மிகவும் நைஸ் பர்சன் மற்றும் ஜெனியூன் பர்சன் பல இடங்களில் அவரிடமிருந்து எப்படி சூழ்நிலைகளை பொறுமையாக கையாளுவது என்று குறித்து நான் கற்றுக் கொண்டேன். அவரிடம் எனக்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை. வெளியே வந்த பிறகு நானும் அவரும் நல்ல நண்பர்களாக இருப்போம் என்று பேசினார் நீங்களும் அவர் பேசிய வீடியோவை முழுமையாக பார்க்க.. கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்..! Watch the below video..!

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment