வாரிசு திரைப்படத்தின் ட்ரைலர் வெளியான மூன்று மணி நேரத்திற்குள் சுமார் 8 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்திருக்கிறது. இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் வாரிசு. இந்த படம் தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் உருவாகி உள்ளது. தெலுங்கு இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், குஷ்பூ, பிரபு, சரத்குமார், யோகி பாபு போன்ற பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஆக்ஷன், எமோஷனல், நட்பு, காதல் என அனைத்தும் கலந்த கலவையாக இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை தில் ராஜு தயாரித்து இருக்கிறார். படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வாரிசு படம் குறித்த அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியாக தொடங்கியது. வாரிசு படத்தின் படப்பிடிப்புகளில் இருந்து பல காட்சிகள் இணையத்தில் கசிந்து படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. படத்திலிருந்து ஏற்கனவே ரஞ்சிதமே, தீ தளபதி, சோல் ஆஃப் வாரிசு போன்ற பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நாளை மாலை 5 மணிக்கு ட்ரைலர் வெளியாகும் என்று படக்குழு நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை கொடுத்திருந்தனர். அதே போல ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சுமார் 2.30 நிமிடங்கள் மட்டுமே இருக்கும் இந்த ட்ரைலர் வெளியான ஒரு மணி நேரத்திலேயே 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருந்தது. தற்போது ஒரு மணி நேரத்தை தாண்டி இருக்கும் நிலையில் இரண்டு மில்லியன் பார்வையாளர்களை நெருங்கி வருகிறது. இந்த சாதனை எல்லாம் தளபதியால் மட்டுமே செய்ய முடியும் என்று விஜய் ரசிகர்கள் மார்தட்டி வருகின்றனர். வாரிசு படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அஜித்தின் துணிவு படத்துடன் இந்த படம் மோத இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். ட்ரைலர் வீடியோவை நீங்களும் காண.! Watch the Below Video..!
Youtube Video Code Embed Credits: Sun TV