துணிவு படத்தின் ரிலீஸ் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வாரிசு படம் வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் வாரிசு. இந்தப் படத்தை வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரித்திருக்கிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இவர்களுடன் சேர்ந்து ஷாம், பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பூ போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். வாரிசு படத்தின் மூலமாக விஜய் படத்திற்கு முதல் முறையாக இசையமைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் இசையமைப்பாளர் தமன். இந்த படம் ஒரு குடும்ப படம் என்றும், எமோஷனல் நிறைந்த வித்தியாசமான கேரக்டரில் நடிகர் விஜய் நடித்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை ட்ரைலர் வெளியானது. வெளியான சில நிமிடங்களிலேயே மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து வருகிறது வாரிசு ட்ரெய்லர்.

ட்ரெய்லர் வெளியான போதே படம் வெளியாகும் தேதியையும் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் வெளியாகும் தேதியை அறிவிக்கவில்லை. இதனால் துணிவு படக் குழுவினர் முந்திக்கொண்டு படம் வெளியாகும் தேதியை அறிவித்தனர். அதன்படி துணிவு வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வாரிசு படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் ட்ரெய்லர் தாமதம், ரிலீஸ் தேதி தாமதம் என்று தொடர்ந்து ரசிகர்களுக்கு குழப்பமே நீடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை ட்ரைலர் வெளியான போது காதல், காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட், குடும்பம் என அனைத்தும் கலந்த ஒரு கமர்ஷி.யல் படமாக இருக்கும் என்று தெரியவந்தது. இதனால் ரசிகர்கள் ரிலீஸ் தேதியை ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்தனர். மாலை வாரிசு ட்ரெய்லர் வெளியானவுடன் துணிவு படத்தின் வெளியிட்டு தேதியை அதன் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது ஆவலை கூறி வந்தனர் அதன்படி தற்போது வாரிசு படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் துணிவும் வாரிசும் நேரடியாக வருகின்ற 11ஆம் தேதி மோத இருக்கிறது. இந்த பொங்கல் தல மற்றும் தளபதி ரசிகர்களுக்கு சிறந்த பொங்கல் ஆக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இரண்டு பெரிய நடிகர்களின் படமும் ஒரே நாளில் வெளியாவதால் தியேட்டர்கள் கிடைப்பதிலும் சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
#Varisu is releasing worldwide in theatres on Jan 11th 🔥
Indha Pongal pakka celebration nanba 🤩#VarisuFromJan11 #Thalapathy @actorvijay sir @directorvamshi @MusicThaman @iamRashmika @7screenstudio @TSeries #BhushanKumar #KrishanKumar #ShivChanana #Varisu #VarisuPongal pic.twitter.com/tJeqVqNYdB— Sri Venkateswara Creations (@SVC_official) January 4, 2023