கர்ப்பமாக இருக்கும் முல்லை.! வேற லெவல் ப்ரோமோ.! இந்த ட்விஸ்ட்ட எதிர் பார்க்கவே இல்லையே

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது முல்லை கர்ப்பமாக இருக்கிறார். அந்த ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. அந்த ப்ரோமோவை பார்த்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் பலரும் கமெண்டில் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். சின்னத்திரையை ஒளிபரப்புவதில் உச்சகட்டத்தில் இருக்கும் விஜய் டிவி, பல குடும்பத் தொடர்பான நாடகங்களை ஒளிபரப்பி வருகிறது. குறிப்பாக இல்லத்தரசிகளை மட்டும் குறி வைக்காமல் ஒட்டுமொத்தமாக பலரின் மனம் கவர்ந்த தொடர்களை விஜய் டிவி ஒளிபரப்பி வருகிறது. இந்த நிலையில் விஜய் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் கதிர் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்கள் குமரன் மற்றும் லாவண்யா. கதைப் படி குமரன், கதாநாயகன் மூர்த்தியின் இரண்டாவது தம்பியாவார். இவருக்கும் இவரது மனைவி முல்லைக்கும் குழந்தை பாக்கியம் இல்லை என்பது தெரியவந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கர்ப்பமாக இருக்கும் முல்லை.! வேற லெவல் ப்ரோமோ.! இந்த ட்விஸ்ட்ட எதிர் பார்க்கவே இல்லையே 1
முல்லைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதி இல்லை என்று மருத்துவர்கள் ஒரு கட்டத்தில் கை விரித்து விட்டனர். அந்த மருத்துவ செலவிற்காகதான் மீனாவின் அப்பாவிடம் தான் கடன் வாங்கி இருப்பார் கதிர். அங்கிருந்து தான் பிரச்சனை தொடங்கியது. பின்னர் ஒவ்வொன்றாக ஆரம்பித்து கடைசியில் கடை வீடு என அனைத்தையும் இழந்து நடுத்தெருவில் நின்று கொண்டிருக்கின்றனர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம். ஆனாலும் மனம் தளராமல் குடும்பத்தை கட்டுக்கோப்பாக நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை கர்ப்பமாக இருப்பதாக ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸில் ஆரம்பம் முதலே ஒரு ரொமாண்டிக் ஜோடிகளாக வலம் வருபவர்கள் தான் முல்லை மற்றும் கதிர் ஜோடி. இதில் முல்லை கதாபாத்திரத்தில் இதுவரை மூன்று நபர்கள் மாறிவிட்டனர். தற்போது லாவண்யா முல்லையாக நடித்து வருகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  மீண்டும் பிரபல நடிகருக்கு வில்லனாக களம் இறங்கும் விஜய் சேதுபதி? இந்த முறை யாருக்கு வில்லன் தெரியுமா

கர்ப்பமாக இருக்கும் முல்லை.! வேற லெவல் ப்ரோமோ.! இந்த ட்விஸ்ட்ட எதிர் பார்க்கவே இல்லையே 3
முல்லை கதாபாத்திரத்தில் வி.ஜே சித்ரா நடித்து வந்த போது அவருக்காகவே இந்த நாடகத்தை பலரும் பார்த்து வந்தனர். பின்னர் அவர் மரணம் அடைந்து விட்டதால் அந்த கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வந்தார். தற்போது அவரும் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். இதனால் சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்து வந்த லாவண்யா இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். குழந்தை பிறக்காது என்று மருத்துவர்களால் கைவிடப்பட்ட போதிலும் முல்லைக்கு குழந்தை பிறக்க இருக்கும் செய்தி பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video.!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment